ரணில் பெற்ற கடன்களை, நானே செலுத்தினேன் - மஹிந்த
ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை தாமே செலுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடன் சுமை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டில் நான் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது அப்போதைய ரணில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொகை 2222 பில்லியன் ரூபாவாகும் எனவும் கூறியுள்ளார்.
இந்தக் கடன்தொகையை நானே செலுத்தியிருந்தேன். இது பற்றி ஓர் வார்த்தைகூட ரணில் பேசுவதில்லை எனவும் சுட்டிக்காட்டி யுள்ளார்.
எனது அரசாங்கம் நாட்டை கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தி கடனைக் காண்பித்து நாட்டின் சொத்துக்களை இந்த அரசாங்கம் விற்பனை செய்கின்றது.
மேலும், பல நாடுகளுக்கு கடன் செலுத்த வேண்டியிருப்பதாக பிரச்சாரம் செய்து ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் சொத்துக்கைள வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment