Header Ads



புலிப் பயங்கரவாதிகள், மீண்டும் எழுவதற்கு முயற்சி

(எம்.எப்.எம்.பஸீர்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர். 

கிளினொச்சியில் பாதைகைகளில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரை தாக்கி அவர்களது ஆயுதங்களை கொள்ளையிட்டு அதனூடாக தாக்குதல்களை நடத்துவது தொடர்பிலான தகவல்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பல தடவை முயற்சி செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸாரின் ஆயுதங்களை கொள்ளையிட அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட கிளினொச்சியின் காடுகளில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களை மீளப்பெறும் நோக்கில் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நடவடிக்கைகள் இரவு வேளையிலேயெ பெரும்பாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மீளுருவாகும் நோக்கில் முன்னாள் போராளிகள் சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வல்லது எனவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. இதில் நம்நாட்டு புலனாய்வுத்துரை நன்றாக கவனத்துடன் உள்ளது என்பது தெளிவாகின்றது மேலும் இந்த கொள்ளை கொலைகார கூட்டம் மீண்டும் இலங்கை இந்துதமிழர்களை பாதாங்குளிக்குல் தள்ள முயற்சிக்கின்றது மேலும் இந்த கூட்டம் நாம் தொழிநுட்ப துறையில் வளர்ச்சி அடைந்த இலங்கையில் 2017 வாழ்கின்றோம் என்பதை மறந்துவிட்டது அதை நான் அவர்களுக்கு உணர்திகொள்கின்றேன்

    ReplyDelete
  2. இதை தென்னிலங்கையில் ஆட்சிக்கா அலைந்து திரியும் ஒரு குடும்ப கும்பல் இந்த நாசகார வேலைகளை தங்களது கைகூலிகளை வைத்து நாடகமாடக்கூடும் இதைத்தான் அவர்கள் தற்போது அவர்களின் பிரச்சாரங்களில் முன்னரிவிப்பு செய்கின்றார்கள்

    ReplyDelete
  3. வரலாறு கூறும் பாடங்களை இந்த அரசு மறந்தது தான் இதற்கு காரணம். முந்திய அரசு வடக்கில் இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்து வைத்திருந்தது இதனால் தான். தமிழர்கள் 100% வாக்குகளை வழங்கி மகிந்தவை வீட்டிற்கு அனுப்பிவைத்ததும் இதற்காக தான். முஸ்லிம்களை புலிகளிடம் இருந்து விடுவித்த மகிந்தவை முஸ்லிம்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்ததும் இதற்குதான். இந்த முட்டாள் அரசை நம்பிய முஸ்லிம்களின் கதியும் அதோகதிதான்

    ReplyDelete

Powered by Blogger.