Header Ads



சூரா கஃபும், இலங்கை வைத்தியர்களின் வேலை நிறுத்தமும்..!!

-ARM INAS-

وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۫ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًـا‌ لَّـقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا‏ 

18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.


اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِيْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ يَّاْخُذُ كُلَّ سَفِيْنَةٍ غَصْبًا‏ 18:79. “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.

18:86 حَتّٰٓى اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِىْ عَيْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ؕ ‌قُلْنَا يٰذَا الْقَرْنَيْنِ اِمَّاۤ اَنْ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ فِيْهِمْ حُسْنًا‏ 
18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.


வெள்ளிக்கிழமையானால் இந்த சூராவை ஓதாதவர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமையானால் அனைவரும் இதனை ஓதுவார்கள். அந்தளவுக்கு பல சிறப்புகளை கொண்ட சூரா இது. குர்ஆன் எக்காலத்துக்கும் பொருத்தமானது. எந்த சூழலுக்கும் பொருத்தமானது.

நான் மேலே பதிந்துள்ள  முதலாவது வசனம்  சூரா கஃபின் வசனம் (18:14)

தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஈமான் கொண்ட சில இளைஞர்களை  தனது அதிகாரத்தால் துன்புறுத்தும்  ஒரு கொடுங்கோல் மன்னனை பற்றி சொல்கிறது. அதாவது அந்த அரசன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி  அதிகாரமற்ற பலவீனமான இளைஞர்கள் மீது அத்து மீறுகிறான். அரசனின் அதிகார துன்புறுத்தலால் ஈமான் கொண்ட இவ்விளைஞர்கள் குகைக்கு செல்கிறார்கள்.

இரண்டாவது வசனம் (18:79) இந்த வசனமும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது அதிகார பலத்தை பயன்படுத்தி அடுத்தவர்களின் சொத்தை கொள்ளையடித்து அடுத்தவர்களுக்கு பலவீனர்களுக்கு  அநீதியிழைக்கும் ஒரு அரசனை பற்றியே குறிப்பிடுகிறது

மூன்றாவது வசனம் (18:86) இந்த வசனம் கிட்டத்தட்ட முழு உலகையும் அல்லது உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த முழு அதிகாரம் படைத்த ஒரு அரசனை பற்றி குறிப்பிடுகிறது. துல்கர்னைன் என அழைக்கப்படும் அதிகாரம் படைத்த இவர் தனது அதிகாரத்தின் மூலம் தனது பலத்தின் மூலம் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார். பலவீனமானவர்களுக்கு உதவுகிறார். 

அல்லாஹ் அனைத்து அடியார்களிடமும் இதனையே எதிர்பார்க்கிறான். ஒவ்வொருவரும் தமது அதிகாரத்தின் மூலம் அடுத்தவர்களுக்கு அருளாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

SAITM நிறுவனத்துக்கு நீதிமன்றம் சட்ட அந்தஸ்து கொடுத்து அதனை அங்கீகரிதுள்ளது. அது சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம். அரசு அல்லது நீதிமன்றம் குற்றமிழைத்ததற்கு வைத்தியர்கள் பொதுமக்களை தண்டிக்க முற்படுகிறார்கள்.  இது பலமுறை நடந்துமிருக்கிறது இதனால் பல அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.

வைத்தியர்களே உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். வைத்தியசாலையில் கிழமைக்கு ஒரு நாள் தான் கிளினிக் இருக்கும். மருந்து எடுக்க வசதியில்லாத பல பாமர ஏழைமக்கள் அரசின் இலவச மருந்தையும்  அரசின் பணியாளர்களான உங்களை மட்டுமே நம்பி வருகின்றனர். இந்தகிழமை இவர்களுக்கு கிடைக்காவிடின் அடுத்த கிழமைவரை அவர்கள் காத்திருக்க வேண்டும். இவர்களில் பலரின் ஊருக்கு ஒழுங்கான பஸ் சேவை   கூடஇல்லை

விடியல் காலையிலேயே எழுந்து சிலர் சாப்பிடாமல் கூட தயாராகி உங்கள் அரவணைப்பை  உங்கள் மருந்தை எதிர்பார்த்து வருகிறார்கள். பலர் தொழிலுக்கே லீவு போட்டு வருகிறார்கள். அநுராதபுரம் போன்ற தூரபிரதேசங்களிலிருந்து கூட பலர் கொழும்புக்கு  கிளினிக் வருகிறார்கள். நாளை காலை 8 மணிமுதல் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் என பலருக்கு தெரிந்திருக்காது. யாரோ செய்த குற்றத்துக்காக ஏதுமே அறியாத இந்த பலவீனமான பாமர ஏழை மக்களை நீங்கள் தண்டிக்க முற்படுவது ஏன்.

தனியார் வைத்தியசாலைகளுக்க சென்று சொகுசு அறைகளில் தங்கி சிகிச்சை பெற வசதியில்லாததால் தான் இவர்கள் அத்தனை துயரப்பட்டு பலமணிநேரம் வரிசையில் நின்று சிகிச்சை பெற வருகிறார்கள். உங்கள் எதிரிகளான நீங்கள் குறிவைக்கும். எந்த ஒருவனும் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும். அப்படியிருந்து ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நீங்கள் தனியார் வைத்தியசாலையில் அல்லது உங்களது தனிப்பட்ட கிளினிக்கில் வேலை நிறுத்தம் செய்யமாட்டீர்கள். ஏழைப் பாமர பொதுமக்களுக்கான ஒரே நிவாரணமான அரசவைத்தியசாலைகளில் மட்டும்தான் உங்கள் வேலை நிறுத்தம்

சில வேலை சூரா கஃப் இந்தக் காலப்பிரிவில் இறங்கியிருந்தால் இறைவன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அந்த அரசர்களுக்கு பதிலாக உங்களை இக்கால வைத்தியர்களை உதாரணமாக குறிப்பிட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதிகாரத்தை துஷ்பிரயோகத்ததில் மிக கெட்ட உதாரணம் தான் பிர்அவ்ன். பிர்அவ்னும் அதிகாரா துஷ்பிரயோகம் தான் செய்தான். நான் வைத்தியர்களை பிர்அவ்ன் என்று சொல்ல வரவில்லை. உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஏழைகளின் பலவீனர்களின் பாமரர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம். நீங்கள் வாழ் நாள் பூராகவும் சிரமப்பட்டு செய்த நற்காரியங்கள் அனைத்தும் அழிந்து போக அந்த ஒரு பாவம் போதும். 

அதிகாரம் பதவி என்பது கௌரவம் அல்ல. அது ஒரு அமானிதம். அதனை அடுத்தவர்களை அழிக்கவோ அல்லல்படுத்தவோ ஒரு மனிதன் பயன்படுத்தமாட்டான் அதனை அடுத்தவர்களுக்கு அருளாகவே பயன்படுத்துவான். ஏழைகள் விடயத்திலும் எந்த அதிகாரமும் இல்லாத பலவீனர்களின் விடயத்திலும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். நிதானமாக சிந்தியுங்கள்

3 comments:

  1. Very good point.doctors must work for our soceiety

    ReplyDelete
  2. This doctors strike, not because of the people interest rather there income related issues. That how I see this mater. Also I accept the above points withe out any doubt.

    ReplyDelete
  3. வைத்தியர்களுடைய வேலை நிறுத்தமானது, நியாயமான முறையில் மக்களுக்காகப் போராடி, அநியாயமான முறையில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களை விடுவிக்கக்கோரிய போராட்டமாகும். மாறாக நோயாளிகளை துன்புறுத்தும் நோக்கமல்ல.

    SAITM இல் கல்வி கற்கும் மாணவர்களில் பலர் வைத்தியர்களுடைய, பொறியியலாளர்களுடைய, தொழிலதிபர்களுடைய பிள்ளைகளே. அந்த வகையில் வைத்தியர்கள் SAITM இற்கு எதிரானவர்கள்அல்ல.

    எனினும் கிட்டிய எதிர்காலத்தில் இலங்கையின் வைத்தியத் துறைக்கு நேர இருக்கும் அவப் பெயரை விட்டும் வைத்தியத்துறையை பாதுகாப்பது ஒவ்வொரு வைத்தியரதும் கடமை. அந்த வகையிலேயே அவர்களுடைய போராட்டம் அமைந்தது.

    18:79 இல் சூறா கஹ்பில் ஏழையுடைய கப்பலிலே ஓட்டை போட்டார்கள் கிள்று அலைஹிஸ்ஸலாம்.

    அரைநாள் வேலை நிறுத்தத்தால் () சில நோயாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை. அவர்களுடைய கஷ்டத்தை விட நாட்டின் ஒட்டுமொத்த வைத்திய துறையையும் பாதிக்கும் சில விடயங்களுக்காகவே அவர்களுடைய போராட்டம் அமைந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.