டக்ளஸிடம் யாழ்ப்பாண முஸ்லிம்கள், விடுக்கும் கோரிக்கை
கடந்த வருடம் யாழ்ப்பாணத்திலிருந்து வேலனை வரையிலான வீதி ஈபிடீபி செயளாலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் கார்பட் இடப்பட்டது யாவரும் அறிந்ததே.
அதேவேளை வங்களாவாடி சந்தியிலுள்ள பிள்ளையார் கோவில் ஏபி15 வீதியில் இருந்து சாட்டி வரையிலான 2.5 கிலோ மீட்டர் வீதி கார்பட் இடப் படாமையினால் வீதி பள்ளமும் குழியுமாக காணப் படுகின்றது. இதனால் மண்கும்பான் வெள்ளைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு வரும் மக்களும் அந்த பாதையூடாக பயணிக்கும் வேலனை சாட்டி மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
எனவே இந்த வீதியை கார்பட் இடுவதன் மூலம் அதிகமான பிரயாணிகள் மண்கும்பானுக்கு விஜயம் செய்வர். இதனால் குறைவான பிரயாணிகள் வருகையால் வீழ்ச்சியடைந்திருக்கும் வேலனை பிரதேச சபையின் வருமானமும் அதிகரிக்கும்.
மேலும் முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் அருகிலுள்ள கடலில் குளிப்பதற்கும் விஜயம் செய்யும் மக்களுக்கும் இந்த வீதி கார்பட் இடப்பட்டால் மிகுந்த பிரயோசனத்தை அளிக்கும்.
எனவே இந்த வீதியை கார்பட் வீதியாக மாற்றுவதற்கு ஆவன செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
Post a Comment