இனையத்தள குழுமங்களும், நிபந்தனைகளும்..!!
-ஷரீப் அப்துல்லாஹ்-
இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த உறவுகளும் நட்புகளும் அறிமுகங்களும் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பங்கள் அமைந்துள்ளன. மேலும் இந்த முகப் புத்தகம், வட்ஸ் அப், இன்ஸ்ராகிராம் போன்றவை குறைந்த செலவில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் அமைத்துத் தந்துள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த உறவுகளும் நட்புகளும் அறிமுகங்களும் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள இந்த இனையத்தள குழுமங்கள் உதவும் அதே வேளையில் அவ்வாறு நீண்ட காலத்தின் பின்னர் இனையத்தளம் மூலம் சேர்ந்தவர்கள் கருத்து முரண்பட்டு பகை கொண்டு பிரிந்து விடுவதையும் பார்க்கின்றோம். இந்த குழுமங்கள் இன்றைய காலகட்டத்தில் திண்ணைகள் அல்லது சந்திகள் அல்லது சபைகள் போன்றே கருத்துப் பறிமாற்றங்கள் வாதப் பிரதிவாதங்கள் மார்க்க விடயங்கள் என்பன பகிரப்படுகின்றன.
சபை ஒழுங்குகள் பற்றி அபு தாவூதில் ஒரு ஹதீஸில் கூறப்பட்டதன் பிரகாரம் எந்த சபையில் அல்லாஹ்வைப் பற்றியும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பற்றியும் பேச்ப்படவில்லை அக்கூட்டத்தினர் இறந்த ஒரு கழுதையை சுற்றி உட்கார்ந்து இருந்து பிரிந்து சென்றவர்கள் போலாவார்கள் என்ற கருத்துப் பட கூறப் பட்டுள்ளது.
சில குழுமங்கள் தங்களுடைய வட்ஸ் அப் குழுமத்தில் மார்க்கத்தைப் பற்றி கதைப்பது தடை, ஹதீஸ் , குர் ஆன் போடுவது தடை என்றெல்லாம் நிபந்தனை விதித்து செயற்படுகின்றன.
இது உண்மையில் ஆபத்தான நிபந்தனைகள். குர் ஆன் ஹதீஸ் பேசப் படாத இடத்தில் செய்த்தான் ஆதிக்கம் செலுத்துவான். அது பிரயோசனமற்ற செயல் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே அவ்வாறான நிபந்தனைகளை கொண்டுள்ள இனையத்தள குழுமங்கள் தயவு செய்து அவற்றை நீக்கவும். ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு ஹதீஸையோ குர் ஆன் தர்ஜுமாவையோ போடலாம் என்றவாறு நிபந்தனைகளை மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நல்ல செய்தியை அந்தச் செய்தியை பார்க்காத மற்றவர்களுக்கு தொலைபேசி மூலமோ அல்லது வேறு வழிகளிலோ சொல்லலாம். ஆனால் தவறாக விளங்கப் படும் செய்திகள் அவ்வாறான வழிகளில் மற்றவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் இருவருக்கிடையில் பகை மூழும். இது நாரதரின் (செய்த்தானின்) செயற்பாடு. எனவே ஒரு செய்தி தவறாக இருப்பின் அல்லது பிழையான அர்த்தத்தை உங்களுக்கு அளித்தால் அதனை மற்றவர்களுக்கு தெரியப் படுத்துவது புறம் பேசல் அல்லது இட்டுக் கட்டல் என்ற என்ற வரையறைக்குள் வரும்.
அண்மையில் ஒரு குழுமத்தில் ஒருவர் பதிவிடும் போது தனக்கு எல்லாம் தெரியும் தனக்கு ஹதீஸ் சொல்லைத்தர வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியிருந்தார். இது நபியை நிராகரிப்பதற்குச் சமமாகி விடும். எனவே வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருவரின் கருத்தை இன்னொருவர் குர் ஆன் எழுத்துக்களை பிரித்து ஆராய்வது போல் தமிழ் வசனமொன்றை ஒவ்வொரு சொல்ல்லாக பிரித்து அது பிழை இது பிழை என்று பண்டிதராகியிருந்தார்.
வட்ஸ் அப்பால் பிரிந்த உறவுகள் எத்தனையோ, எத்தனையோ திருமண் பந்தங்கள் முறிவடைந்துள்ளன, உறவுகளுக்குள் பகை , நண்பர்களுக்குள் பகை, இப்படி எத்தனையோ பகைகள் இந்த வட்ஸ் அப் போன்ற குழுமங்களை சரியாக பயன் படுத்தத் தெரியாதவர்களினால் ஏற்படுகின்றது.
எனவே தேவையற்ற நிபந்தனைகளை இந்த குழுமத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மார்க்கத்தை கூறுவதை தடுக்க கூடாது. ஆனால் கருத்து முரண்பாடு உள்ள விடயங்களை விவாதத்துக்காக முன்வைத்து சபை ஒற்றுமையை குழப்பவும் கூடாது.
பிழையான செய்திகளை ஆதாரமற்ற செய்திகளை மற்றும் பிழையாக விளங்கிக் கொள்ளப் பட்ட செய்திகளை பகிருவதையும் தவிர்ந்து கொள்ளுங்கள். அண்மையில் ஒருவர் பர்தாவுடன் இருந்த ஆண் ஒருவரை தாக்குவதைப் போன்ற வீடியோவைப் பதிவிட்டிருந்தார். ஏனைய மதத்தவர் இதனைப் பார்க்கும் போது அதை அவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பயன் படுத்துவார்கள். எனவே இவ்வாறான இஸ்லாத்துக்கு முரணான செயல்களையும் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் இந்த குழுமங்களினால் உண்டாகக் கூடிய தீய விளைவுகளை விட்டு எம்மைப் பாதுகாத்து நாளை மறுமையிலும் எம்மை பாதுகாத்து அபயமளிப்பானாக! ஆமீன்
Thought provoking article.Islam obviously encompasses everything these social media not exception in all sphere of life Islam should b echoed loud n clear .
ReplyDelete