Header Ads



‘அன்றும் கள்வர் இருந்தனர்; இன்றும் கள்வர் உள்ளனர்’ - ஜனாதிபதி

களவெடுக்கும், தவறிழைக்கும் நபர்கள் கடந்த ஆட்சிக்காலத்திலும் இருந்தனர். இந்த ஆட்சிக்காலத்திலும் இருக்கின்றனர் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துத்தான், நான் செயற்படுகின்றேன். அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கின்றவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு, எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, தான் எதற்கும் தடைவிதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.  

தான், வைராக்கியம் கொள்ளவில்லை, யாருடனும் கோபமும் இல்லை. சகலரையும் ஒன்றிணைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதே தன்னுடைய ஒரே நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.  

கட்சியின் மே தினத்தை, இம்முறை, மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.  

இதேவேளை, புதிய பொறிமுறையில், முன்னோக்கி நகர்வதற்கு, ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், அதற்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குவதாகவும், தொகுதி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.  

No comments

Powered by Blogger.