Header Ads



'முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பௌத்த, இன­வாத குழுக்­களால் பாது­காப்­புக்கு குந்­தகம்'

- ஏ.எம்.வைஸ் -

கண்டி மாவட்­டத்தில் பௌத்த இன­வாதக் குழுக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது பாது­காப்­புக்கு குந்­த­க­மாக இருக்­கி­றது

எனவே இது­பற்றி கூடிய கவ­ன­மெ­டுத்து இந்த இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை இல்­லாமல் செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார். 

கண்டி மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற இந்த மாதத்­திற்­கான மாவட்ட இணைப்புக் குழுக் கூட்­டத்தில் பாது­காப்பு நிலை­மை­களை விளக்கும் போதே இவர் இதனைத் தெரி­வித்தார்.  மாவட்ட இணைப்­புக்­குழு கூட்டம் மத்­திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்­க­நா­யக்க தலை­மையில் நட­டை­பெற்­றது.  அங்கு விளக்­க­ம­ளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மகஜர் ஒன்று தம்­புள்­ளையில் கைச்­சாத்­தாகிக் கொண்­டி­ருக்­கி­றது.  அது தம்­புள்ளை பள்­ளிக்கு எதி­ரா­ன­தாகும். சில பிக்­குமார் இதன் முன்­ன­ணியில் நிற்­கின்­றனர்.

தம்­புள்­ளையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள பள்­ளி­வாசல் தேவை­யில்லை என இவர்கள் மக்­களின் கையொப்­பத்தைப் பெறு­கின்­றனர். எமது நாட்டின் அர­சியல் யாப்­பின்­படி மதங்­களைப் பின்­பற்றும் சுதந்­திரம் இருக்­கி­றது. அதற்கு முஸ்­லிம்­க­ளுக்கு பள்­ளி­வாசல் தேவை. இதை எதிர்க்க முடி­யாது.

இந்த நட­வ­டிக்­கைக்கு மல்­வத்தை, அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர்கள் சம்­பந்­த­மில்லை. தம்­புள்ள விகாரை அதி­ப­தியும் சம்­பந்­த­மில்லை. எங்கோ இருந்து வரும் சில பிக்­கு­களே இதனைச் செய்­கின்­றார்கள். 

சில வாரங்­க­ளுக்கு முன் தவு­ல­க­லயில் முஸ்லிம் ஒருவர் அர­சாங்­கத்­திடம் குத்­த­கைக்குப் பெற்­றுள்ள காணியில் புத்தர் சிலையை வைத்­துள்­ளனர்.

இதுவும் பிக்­குகள் தலை­மை­யி­லான ஒரு குழுவின் வேலை. அந்தக் காணியில் முஸ்­லிம்கள் பள்­ளி­கட்டப் போகி­றார்­களாம். அத­னா­லேயே சிலையை வைத்தோம் என்­கி­றார்கள் இது குறித்து விசா­ரித்தால் அங்கு உள்ள பள்­ளிக்கே சனம் போவது குறை­வாக இருக்­கி­றதாம். எமக்கு புதிய பள்ளி எதற்கு இது பொய் என்று என்­னிடம் கூறினார்.

இதற்கும் அங்­குள்ள பிக்­குவின் சம்­பந்தம் இல்லை. எனவே இது பிரச்­சி­னைகளை உண்­டாக்க திட்­ட­மிட்ட வேலை. அர­சாங்­கத்­துக்கு எதி­ரான குழு­வி­னரின் செயல். 

அண்­மையில் கட்­டு­கஸ்­தோட்டை பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் இரண்டு புத்தர் சிலைகள் போடப்­பட்­டி­ருந்­தன. ஒன்று உடைந்திருந்­தது. இதை முஸ்­லிம்­களே செய்­தனர்  என்று காட்டி கல­வரம் ஒன்றை ஏற்­ப­டுத்தக் கூடிய நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆனால் நாம் விசா­ரித்த போது ஒரு பௌத்த வீட்­டி­னரே இதை கொண்­டு­வந்து போட்­டுள்­ளனர். சிலையின் குறை­பாடு கார­ண­மாக இதை கொண்டு வந்து போட்­டுள்­ளனர். இதை விசா­ரித்த பின்னே உண்மை தெரிந்­தது. விசா­ரிக்­காது இருந்­தி­ருந்தால் பிரச்­சினை வேறு­வ­கையில் சென்­றி­ருக்கும். 

தவு­ல­கல காணியில் ஒரு சன­ச­மூக நிலை­யத்தை கட்டி இரு தரப்­பி­னரும் பாவிக்க சிங்­கள, முஸ்லிம் மக்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இது ஒரு நல்ல தீர்­மா­ன­மாகும்.

இதற்கு விரைவில் ஒரு முடி­வு­கட்ட வேண்டும். பொலி­ஸா­ருக்கும் நட­வ­டிக்கை எடுக்­கலாம். எமக்கும் முடியும். எம்­மி­டமும் கண்­ணீர்ப்­புகை, ஆயுதம் போன்­றன உள்­ளன. இவற்றைப் பாவிக்­காது நல்ல முறையில் தீர்வு காணவே விரும்­பு­கிறோம். எனவே முதலமைச்சர் இது பற்றி தீர்­மா­னங்­களை எடுப்­பது நல்­லது.

பௌத்­தர்கள் மத்­தியில் மட்­டு­மல்ல முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் பிள­வுகள் உள்­ளன. பள்­ளி­வா­சல்­களில் இரண்டு குழுக்கள் இயங்­கு­கின்­றன. இவை ஒன்­றுக்­கொன்று போட்­டி­யாக உள்­ளன. இது­பற்­றிய தக­வல்­களும் எமக்குக் கிடைத்­துள்­ளன. இதுபற்றியும் முஸ்லிம் தலைமைகள் யோசிக்க வேண்டும்.

எவ்வாறெனினும் மௌலவிமார்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர் என்றார்.

அத்துடன், பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பாகவும் சிலரை கைது செய்திருக்கிறோம். நீதிமன்றத் தில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள். இது தவிர கண்டியில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என்றார்.

No comments

Powered by Blogger.