Header Ads



இலங்கை பெண் மீது, உலகத்தின் அவதானம்..!

நீல திமிங்கலம் தொடர்பில் ஆராய்ந்த இலங்கை பெண் ஒருவர் முழு உலகத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளார்.

கடல் வாழ் உயிரினங்களில் நீல திமிங்கலங்கள் முக்கிய உயிரினமாக கருதப்படுகின்றது. எனினும் நீல திமிங்கலம் தொடர்பில் மக்கள் மற்றும் அதிகாரிகள் உரிய அக்கறை செலுத்தாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நீல திமிங்கலங்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் பெண் ஒருவர் தொடர்பில் இணையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

அவரது பெயர் பேராசிரியர் ஆஷா டீ வோஸ் என தெரிவிக்கப்படுகின்றது. கடல் உயிரியல் விஞ்ஞானியாக செயற்படும் அவர் திமிங்கலங்கள் தொடர்பில் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பின் காரணமாகவே உலகின் பெயர் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது சிறப்பம்சமாகும்.

அவர் சிறிய வயது முதல் நீல திமிங்கலங்கள் தொடர்பில் அக்கறை செலுத்திய பெண்ணாகும். பெற்றோருடன் கடலுக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலும், கடலில் உள்ள பெரிய மற்றும் சிறிய உயிரினங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வந்துள்ளார்.

தனது ஆர்வம் அதிகமாகியதனை தொடர்ந்து கடல் விஞ்ஞானம் கற்கைளை மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளார். எனினும் இலங்கையில் அந்த கற்கை நெறிகள் இல்லாமையினால், அவர் இங்கிலாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழகத்தில் கடல் விஞ்ஞானம் தொடர்பிலான BSC பட்டம் ஒன்றை பெற்றுள்ளார். அதன் பின்னர் அவர் அவுஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும், ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் பேராசிரியர் பட்டமும் பெற்றுக் கொண்டுள்ளார்.

Who Am I என இணையத்தளத்தில் அவர் வெளியிட்ட கடிதத்தினால் உலகின் அவதானம் அவர் மீது செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் நீல திமிங்கலங்கள் தொடர்பில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பெண்ணாக மாறியுள்ளார். அவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகம் முழுவதும் நீல திமிங்கலங்கள் தொடர்பில் செயற்படும் பெண்ணாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.