ஊடகங்களை சாடுகிறார் ஜனாதிபதி
ஊடகங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டுமேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மார்கெட்டிங் ரேட்டிங்கை அதிகரிப்பதனை பிரதான இலக்காக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்களுக்கும், அச்சு ஊடகங்களுக்கும் மிகப் பெரிய பொறுப்பு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் நாட்டுக்காக மெய்யாகவே குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமையை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஊக்கப்படுத்தி நாட்டை நல்வழிப்படுத்தும் கடமையை ஊடகங்கள் ஆற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முரண்பாடுகளை பிரச்சினைகளை தூண்டும் செய்திகளை ஏன் வெளியிடுகின்றீர்கள் என தாம் ஊடக உரிமையளர்களிடம் கோரியதாகவும் அதற்கு மார்டிங் ரேட்டிங்கை உயர்த்தும் நோக்கில் இவ்வாறு தாம் செய்வதாக அவர்கள் பதிலளித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று தொலைக்காட்சியை பார்க்கும் போது நாடே வீழ்ச்சியடைந்து விட்ட ஓர் நிலைமை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment