Header Ads



சமூக மாற்றத்தின் வழியில், சாமான்ய உம்மத்

Zuhair Ali (MBA,PGD,EDM,GHAFOORI)

"இஸ்லாமிய சமுகம்  அல்லது  உம்மாஹ்" ஆகிய கருதுகோள்கள் இஸ்லாமிய சமூகத்தினை குறிப்பிடுகின்றன, இஸ்லாமிய உலகு என்பது தனியே முஸ்லிம்களை மாத்திரம் குறிக்கவில்லை. மாறாக இதர சமயங்களை பின்பற்றுவோரும் அதில் உள்ளடங்கியிருந்தனர்,எனினும், இஸ்லாமிய உம்மாஹ் என்பது, முஸ்லிம்களை மட்டுமே குறிக்கின்றது.

உண்மையில் இஸ்லாம் தனிமனிதனுக்குள் காணப்படும் உணர்வுகள் சந்ததியை பெருக்கும் உணர்வ (Procreation Instinct) சொத்துச் சேர்க்கும் உணர்வு (Accumulating Wealth) ஆத்மீக உள்ளுணர்வு ((Religious Instinct) மற்றும் பாதுகாப்பு உணர்வு ((Protection) ) போன்ற உணர்வுகளையும் அதனை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் தனிமனிதனுக்குள் “குர்ஆன் சுன்னா அடிப்படையில்” ஒழுங்குபடுத்தும் வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் “ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம்” என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரவேண்டும். உலக வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய குடியரசு,கிலாபாத் இருந்தமையால் இன்று பெயர்கள் மாற்றப்பட்டாலும் பெரும்பான்மையான எல்லா பெயர்களும் அரேபிய வார்தைகளாகவே தோற்றுவிக்கின்றன அந்தலூஸ்-Spain, செய்லான் -Ceylon ,அபீஸீனியா-Ethiopia , பெர்சியா-Iran ,சயாம்-Thailand.

இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல நாடுகளிக்கும் பாரிய அரசியல் வெற்றிகளை பெற்றுவருகிறது. அரசியல் வெற்றி என்பது பிரமாண்டமான இஸ்லாமிய எழுச்சியின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டும்தான் . அரபு முஸ்லிம் நாடுகளின் ஒன்றன் பின் ஒன்றாக சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டு அந்த இடங்களை இஸ்லாமிய சக்திகள் கைப்பற்றி வருகின்றமை இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் ஒரு சிறந்த வெளிப்பாடாகும் .

அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் துனூசியாவில் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது . அதன் பின்னர் அந்த பிராந்தியம் சந்தித்த இரண்டாவது தேர்தல் மொரோகோவில் இடம்பெற்றது அதிலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் எகிப்தில் இஸ்லாமிய சக்திகள் மிகப் பாரிய வெற்றிகளை பெற்றுள்ளது ,அதேபோன்று குவைத்திலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது , அதை தொடந்து அந்த வெற்றி பாதையில் லிபியா , யெமன், சிரியா ஆகியா நாடுகள் பயணிக்க காத்திருகிறது. முஹம்மது நபியின் மரணத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளின் பிற்பாடு மேற்கே அட்லான்திக் சமுத்திரம் தொடங்கி கிழக்கே மத்திய ஆசியா வரையான நிலப்பரப்பு இஸ்லாமிய பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. அத்துடன் இசுலாமிய நாகரிகம் உலகின் கலாச்சார,விஞ்ஞான,வளர்ச்சிக்கு பங்களிப்புச் செலுத்தியதோடு பல விஞ்ஞானிகளையும், வானியலளர்களையும், கணித, மேதைகளையும், மருத்துவர்களையும், தத்துவவியளாளர்களையும் உலகிற்கு தந்தது. மேலும் இசுலாமிய உலகில் தொழிநுட்பம், பொருளாதார உட்கட்டமைப்பு என்பனவும் சிறந்து விளங்கின.

இன்று மேற்கத்திய நாடுகளிலும் மெல்ல இஸ்லாமிய காற்று வீச ஆரம்பித்து இருக்கிறது ,இன்று அமெரிக்காவில் இல்ஹாம் உமர் என்ற எத்தியோப்பிய பெண் அரசியலில் வெற்றி பெற்றதும்,கனடாவில் அஹ்மத் ஹுசைன் என்ற எத்தியோப்பிய வந்தேறியவர் ,மற்றும் பாகிஸ்தானிலிருந்து குடியேறிய இன்று இங்கலாந்தில் சாதிக் கான் மேயராக கால் பதித்தமை நவீன இஸ்லாமிய எழிச்சியில் ஓர் அங்கமாகும் The name more generally describes parts of the Iberian Peninsula governed by Muslims (given the generic name of Moors)   அந்தலூஸ் (Spain) பற்றி  'மூர்ஸ்' என்ற பதமும் குறிப்பிடப்பட்டு “அறபிகள் அல்லது போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்டபடி ‘முஅர்ஸ்’ (ஸ்பெயின் தீபகற்பத்தை ஆண்ட ‘முஅர்ஸ்’ களின் அதே மதத்தை இவர்களும் பின்பற்றியதால் போர்த்துக்கேயர் இவர்களை அவ்வாறு அறிமுகப்படுத்தினர்) வர்த்தகத்திலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் சீக்கிரமே அகற்றப்பட்டனர். அவர்களின் பெயரும் அவர்களிடம் இயற்கையாகவே அமைந்த அரசியல்,இராஜதந்திர ,வியாபார நுணுக்கமும் மட்டுமே அவர்களின் வழித்தோன்றல்களான இலங்கைச் சோனகர்களுக்குக் கிடைத்தன.

 “சோனகர் எந்தவகையிலும் புத்திக்கூர்மையில் குறைந்தவர்கள் அல்லாவிட்டாலும் கல்வியில், விசேஷமாக மேல்நாட்டுப் பானியிலான கல்வியில் அவர்கள் கொஞ்சமேனும் அக்கறை காட்டுவதில்லை. அறபி பாஷாவினதும் நாடுகடத்தப்பட்ட அவருடைய மற்றும் எகிப்திய நண்பர்களினதும் இலங்கை வருகை, சோனக சமுதாயத்தைத் தட்டியெழுப்புவதில் பயனை ஏற்படுத்தியது. ஆனால் அது பெரும்பாலும் ஐரோப்பிய துருக்கியரின் உடையை மேற்கொள்ளல் போன்று வெளித்தோற்றத்திலேயே ஏற்பட்டது. மத்திய காலத்தை மடைமை இருள் கவ்விக் கொண்டிருந்தபோது ஐரோப்பாவினதும் ஆசியாவினதும் பெரும்பாலான பகுதிகளி லெல்லாம் கல்வியறிவினதும் நாகரிகத்தினதும் ஒளிவிளக்கு மங்காது நேர்த்தியாக எரிந்து கொண்டிருக்கச் செய்தவர்கள் இஸ்லாத்தின் வழிநடந்தவர்கள். அந்த இஸ்லாத்தினின்று பெற்ற அரும்பெரும் மரபுரிமைக்கு அருகதையுள்ளவர்களாக சோனகர்கள், தங்களை ஆக்கிக் கொள்ள விரும்புகிறார்கள்.

இன்னும் எத்தனையோ சான்றுகள் சொல்லிக் கொண்டு போகலாம் இலங்கை முஸ்லீம் அரசியலிலும் பல அரச-கால நிலை மாற்றங்கள் (Climate Change) ஏற்பட்டு இருந்தாலும் இன்னும் நாம் இந்த சிறிய தீவுக்குள் பல பிழவு ,பிரிவை கண்டு வருகிறோம். வரலாறு படைத்த நம் உம்மத் இன்று வரலாறை அழிக்க முட்படுகின்றன அரச தலைவர்கள் மனம் இன்னும் எழுச்சி பெறா விட்டாலும் இன்று குடிமக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்றதை  காண்கிறோம் ,சென்ற ஆண்டின் துருக்கிய மக்கள் புரட்சி,அமெரிக்க பள்ளி தாக்குதலின் பின்பான ஆர்ப்பாட்டம்,தமிழ் நாடு ஜல்லி கட்டு போராட்டம் என எங்கும் பசுமை அடைந்திருக்கின்றன எனலாம் .

இஸ்லாம்,வரலாறுகள் படித்தும் இந்த சமூகத்தை விற்று பிழைக்கின்ற தலைமகளுக்கு இவை வெறும் பண்ட மாற்று வியாபாரமாகத்தான் தெரியும் ,சமூகம்,இனம் ,வரலாறு பூர்விகங்கள் ,அரசியல் உரிமைகள் இவர்களுக்கு வெற்று தாள்கள்  அவர்களுக்கு தகுந்தாப் போல் கிறுக்கிக் கொள்கின்றனர் எது சொன்ன போதிலும் இன்று எம் உம்மத் பிரித்தறியக்கூடிய,சமூக மாற்றத்தை,எழுச்சியை,புரட்சியை தலைவர்களை விட நன்றாக படித்து வைத்திருக்கின்றார்கள் என்பதை சமகால விழிப்புணர்வுகள் எடுத்து காட்டுகின்றன.நீங்கள் நடுத்தர உம்மத் என்பதை நிரூபிக்கும் கடமை,பண்பாடு உங்கள் கைய்யிலேயே இருக்கின்றது என்பதை மறக்க வேண்டாம் ,உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தலைவன் இருக்கின்றான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .

No comments

Powered by Blogger.