இலங்கையில் சீனா, இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
இலங்கையை மையமாக கொண்டு, இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாக அமெரிக்கா, இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப். எம். ஸ்மித் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், இலங்கையின் பெரும்பான்மையான துறைமுகங்களுக்கு உரித்துடையவர்களாக சீனா இருப்பதோடு, தென் சீன கடலை ஆக்கிரமித்ததை போன்று தற்போது இந்திய பெருங்கடலையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளமையை, குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது தெற்காசிய வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு சவால்களை ஏற்படுத்தும. இதேவேளை இந்திய எல்லை பகுதியில் இலங்கையை காரணமாக வைத்து அடிக்கடி சீனாவின் நீர்முழ்கி கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலை ஏற்படுத்தும்.
இலங்கையிற்கு 75 சதவீதமான கடல் போக்குவரத்தை மேற்கொள்வது இந்தியாவே ஆகம். இந்நிலையில் சீனாவின் கடற் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்வது பாதுகாப்பான விடயமல்ல.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தில் வெளிநாட்டு பாதுகாப்பு தரப்புகள் நடவடிக்கைகள் எதுவும் நடக்குமென்றால், அயல் நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டுமென கூறிய சில வாரங்களிலேயே சீனாவின் நீர்முழ்கி கப்பலொன்று இலங்கையில் நிறுத்தப்பட்டது. எனவே இது தொடர்பில் இந்தியா மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இலங்கையே காரணமாக இருக்கின்றது என்பதே இக்கடிதத்தின் மூலம் தெரியவருதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கடிதத்தால் இலங்கை இந்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு வித்திட்டு விடுமா என சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
Post a Comment