ஶ்ரீலங்கன் விமான சேவை யாருக்கு..?
ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தகுதியான ஒருவர் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த வர்த்தகமாக காணப்படும் இந்த செயற்றிட்டத்திற்கு தெரிவான முதலீட்டாளரைப் பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்காக 10 நிறுவனங்கள் விலைமனுக்களை முன்வைத்ததாகவும், இவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றே இறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை பீஸ் எயார் நிறுவனம், மாலைத்தீவு சுப்பர் குரூப் நிறுவனம், அமெரிக்கா டி.பி.ஜி. நிறுவனம் ஆகியனவே இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுளள்து. இவர்களில் ஒருவருக்கே ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் செல்லப்போகின்றது.
Post a Comment