Header Ads



யாழ் - ஒஸ்மானியா ஜின்னா மைதானத்துக்கு மின் விளக்குகள்


யாழ்  ஜின்னா  மைதானம்  முஸ்லிம்  இளைஞர்களின்  ஆரோக்கியத்தையும் திறமையையும்  வெளிக்கொனரும்  ஒரு  களமாகும். 

கடந்த 60 வருடங்களில்  பல்வேறு  உதைப்பந்தாட்டப்  போட்டிகளையும் பாடசாலை  மட்டத்திலான  இல்ல விளையாட்டுப்  போட்டிகளையும்  கண்ட  களம்  தான்  இந்த  ஜின்னா  மைதானம்.  

காலத்தின்  மாற்றங்கள்  தொழில்களின்  அமைப்பு  மாற்றங்கள்  என்பவற்றால் பிற்பகலில்  கூட  மைதானத்தை  உபயோகப் படுத்த  நேரமின்றி  வீரர்கள் உள்ளனர். இதனால்  யாழ்ப்பாண  முஸ்லிம்களின்  விளையாட்டுத்துறை குறிப்பாக  உதைப்பந்தாட்டத்துறை  முன்னேறும்  வாய்ப்புகள்  அருகியுள்ளது.  இவ்வாறான  சூழலில்  இரவு  நேரத்தில்  பயிற்சிகளையும்  போட்டிகளையும் நடத்தமுடிந்தால்   முஸ்லிம்களினது  மட்டுமல்ல  யாழ்ப்பாணத்தின் உதைப்பந்தாட்ட  நுட்பங்களில்  குறிப்பிட்ட  வளர்ச்சியைக்  காணமுடியும்.  இவ்வாறான  சிந்தனை  யாழ்  மாநகர  சபையின்  முன்னாள்  உறுப்பினர்   பாஷா மொஹிதீன்  சரபுல்  அனாம்  அவர்களுக்கு  ஏற்படவே  அவரும்  ஈபிடிபி செயலாலர்  நாயகம்  டக்ளஸ்  அவர்களிடம்  செய்த  விஷேட  வேண்டுகோளின் பிரகாரம்  2016.8.29 அன்று  மைதானத்துக்கு  மின் விளக்கு  பொருத்தும்  பணிக்காக  97000 ரூபாவை  டக்ளஸ்  அவர்களின்  பணிப்புரைக்கு   அமைய    யாழ் பிரதேச  செயலகம்  ஒதுக்கியுள்ளது. 

இந்த  நிதி  போதாது  என்பதையுணர்ந்த  டக்ளஸ்  அவர்கள்  மேலும்  97000 ரூபாவை  ஒதுக்கித்  தருவதாக  கூறியுள்ளார்.  

எனவே  யாழ்  ஜின்னா  மைதானம்  மின்னொளியில்  மிளிரும்  காலம் வெகுதூரத்தில்  இல்லை  என்பது  விளையாட்டு  வீரர்களுக்கும்  ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான  செய்தியாகும். 

இந்த  நிதியை  பெறுவதற்காக  முயற்சிகளை  மேற்கொண்ட  சரபுல் அனாம் அவர்களுக்கும்   நிதியை  பெருமனதோடு  ஒதுக்கித்  தந்த  ஈபிடிபி  செயலாளர் நாயகம்  டக்ளஸ்  தேவானந்தா  அவர்களுக்கும்  எமது  சமூகத்தின்  சார்பிலும் யாழ்  ஒஸ்மானியாவின்  பழைய  புதிய  மாணவர்கள்  சார்பிலும்  நன்றியைத் தெரித்துக்  கொள்கின்றோம். 

மேலும்  இந்த  வேலைத் திட்டத்தை  மிக விரைவில்  செய்து  தறுமாறு சகோதரர்  சரபுல்  அனாம்  அவர்களை  ஒஸ்மானியா  பட்டதாரிகள் 
சார்பாக  கேட்டுக் கொள்வதுடன்  சின்னப்  பள்ளி  மையவாடிக்கும்  மின்கம்பங்களையும் மின்விளக்குகளையும்  பெற்றுத்  தருமாறும்  அன்புடன்  வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும் மைதானத்துக்கு மின்கம்பங்களை நடும் போது அவற்றின் உயரம் ஆகக் குறைந்தது 40 அடிகளாக இருக்கக் கூடியவாறு அமைக்குமாறும் ஒவ்வொரு மின்கம்பந்துக்கும் நான்கு போகஸ் மின்விளக்குகளை பொறுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.  இந்த மின்விளக்குகளை உபயோகப் படுத்துவோர் அதற்கான கட்டணத்தை ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபரிடம் செலுத்தி அதனை உபயோகிக்க ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்

ஜான்ஸின்
யாழ் ஒஸ்மானியாவின் பட்டதாரிகள் சங்கம்

No comments

Powered by Blogger.