மாணவனின் கைக்குட்டையால் பாராளுமன்றத்தில், ஏற்படவிருந்த தீ தடுக்கப்பட்டது
நாடாளுமன்றத்தினுள் திடீரென ஏற்பட்ட தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவினை நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு வருகைத்தந்திருந்த பாடசாலை மாணவர் ஒருவரின் கைக்குட்டை நாளுமன்றத்தின் உயரமான இடத்தில் உள்ள அதிக சக்தி வாய்ந்த மின்சார விளக்கின் மீது விழுந்து தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. இதனால் நாடாளுமன்ற சபை மற்றும் கட்டமைப்புகளுக்கு இடையில் இருந்து புகை எழுந்துள்ளது. இதனை பார்வையிட்ட ஊழியர்கள் இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற கட்டமைப்பில் இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் அனைவரையும் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
சம்பவத்தை பார்த்த ஊழியர்கள் உடனடியாக அந்த மின்சார விளக்கிற்கு அருகில் சென்று எரிந்துக் கொண்டிருந்த கைக்குட்டையை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
ஊழியர்களின் விரைவான செயற்பாடு காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டமையால், தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment