'முஸ்லிம் மாணவிகள், பல்கலைக்கழகம் செல்வதில் தவறில்லை'
-M.F.M. பஹாத் அப்பாஸி
கிழக்குப் பல்கலைக்கழகம்-
"நிச்சயமாக நான் அனுப்பப்பட்டதெல்லாம், நற்குணங்களை பூரணப்படுத்துவதற்காகவே" (ஹதீஸ்)
அண்மைக் காலமாக இலங்கை அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் தொடர்பான தகவல்கள் அவர்களுக்கு சார்பாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கசிந்த வண்ணம் உள்ளன. அவைகள் அனைத்தையும் வாசித்த பிறகு , என் மனம் அவர்களை இரு சாராராக பாகுபடுத்தியது. ஒரு சாரார் முஸ்லிம் மாணவிகளை கடுமையாக விமர்சிக்கின்ற தீவிரப்போக்கை கையாள்வது போன்று விளங்கினாலும் எதிர்கால சமூகத்தின் ஆளுமைகளான பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளை இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதனையே அழுத்தமாக எடுத்துரைக்கிறார்கள் என்றும், மற்ற சாரார் கட்டுப்பாடற்ற அதீத பெண் சுதந்திரத்தை வேண்டி நிற்பது போன்று இருந்தாலும் பெண்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதனையே எதிர்பாக்கின்றனர் என்றும் நல்லெண்ணம் வைக்கின்றேன். மொத்தத்தில் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தை எழுச்சியின் பக்கம் நகர்த்தவே முயற்சிக்கின்றனர். அதற்கமைய இஸ்லாமிய கோட்பாட்டின் தெளிவுடன் நாத்திக கோட்பாடுகளையும் கற்கின்ற சமூகவில்துறை மாணவன் என்றடிப்படையில் இது பற்றிய ஒரு தொகுப்பை நடுநிலையாக கீறிட்டுக்காட்டலாம் என நினைக்கின்றேன்.
சமூகத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் வழிகாட்டுகின்ற மார்க்கமே இஸ்லாம்.அதற்காக பல்துறைகள் பற்றிய போதனைகளை எடுத்துரைத்துள்ளது.அவற்றில் கல்வி பற்றிய போதனைகளும், ஆர்வமூட்டல்களும் முதன்மையானவை. இத்தூய மார்க்கம் கல்வி கற்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவ உரிமைகளை வழங்கியுள்ளது என உறுதியாக கூறலாம்.அதே சமயம் அதற்கான வரையரைகளையும், ஒழுங்குகளையும் தெளிவாக கூறியிருக்கின்றது. அதற்குள் நின்று இவ்வுரிமையை பயன்படுத்துவதிலே மனிதனின் ஈருலக வெற்றியும் தங்கியுள்ளது என எம்மை படைத்த இறைவன் உபதேசிக்கின்றான்.ஆகவே இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி கல்வி கற்பது, அதற்காக உதவுவது, ஆர்வமூட்டுவது இபாதத் என்பதனை ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
அந்தவகையில் இலங்கை நாட்டின் கல்வி மட்டத்தில் பல்கலைக்கழக தெரிவு மிக முக்கியமானதாகும். அதிலும் சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி மட்டம் உயர வேண்டும் என்பது அனைவரினதும் அவா. அதிலும் கடந்த 5 வருடங்களின் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவின் விகிதாசாரத்தை நோக்குகையில் பெண்களே அதிகம். ஒரு புறம் ஆண்களின் பின்னடைவு கவலையை ஏற்படுத்தினாலும், பெண்களின் அதீத முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனாலும் மிக அண்மைக்காலமாக இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியினை கற்று வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அவைகள் அனைத்தும் சரியானவை என ஏற்காவிட்டாலும், அவ்வாறான நிலையில் பல்கலைக்கழக சூழல் இல்லை என எவராலும் தீர்த்துக் கெட்ட முடியாது. "அக்குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையும் அற்றவை" என பேனை முனையால் எழுத முடிந்தாலும், நிச்சயமாக பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் உள்ளங்கள் ஏற்று உண்மைப்படுத்தும் என்பதில் எள் முனையளவும் சந்தேகம்
கிடையாது.
மேலும் முஸ்லிம் மாணவர்களின் பண்பாட்டையும் , நடத்தையையும் கவனிக்கும் அதிகாரமுள்ள அமைப்பே முஸ்லிம் மஜ்லிஸ்.இப்படி ஒரு அமைப்பு இருப்பதனைக் காரணங்காட்டி பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பிழையானவை என்று யாராலும் பகல் கனவு கான முடியாது.ஏனெனில் ஒரு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பின் தலைவி மாற்று மத ஒருவரை காதலித்து, இஸ்லாத்தை தூக்கி எறிந்த கசப்பான சம்பவங்களும் பல்கலைக்கழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
பல்கலைக்கழக காதல் எனும் பெயரில் "முஸ்லிம்களும் இப்படியானவர்களா?" என அன்னியர்கள் வியக்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் canteen முதல் வாசிகசாலை வரை முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அரங்கேற்றும் அனாச்சாரங்களும், பாலியல் சேட்டைகளும் காணப்பட்டே வருகின்றன என்பதை பல்கலைக்கழக மாணவர்களின் கண்கள் உண்மைப்படுத்தும். முஸ்லிம் பெண்கள் கற்பை இழந்தால் மாத்திரமா தவறு? ஆணும், பெண்ணும் நட்பு எனும் பெயரில் கைகுலுக்குவது, கூத்தாடுவது, குழுச்செயற்பாடுகளில் கொஞ்சிக்குலாவுவது, பாதைகளில் கணவன், மனைவி போன்று ஒரு குடைக்குள் செல்வது போன்ற மட்டகரமான பிற விடயங்கள் அணுமதிக்கப்பட்டவையா? ஒவ்வொரு சமூக அங்கத்தவறும் சிந்திக்க வேண்டிய முக்கிய தருவாயில் இருக்கிறோம்.ஆனாலும் மிகப் பக்குவமாக கல்வி பயிலும் மாணவிகள் இருக்கத்தான் செய்கின்றனர் என் மீண்டும் அழுத்தமாக கூறிக்கொள்கிறேன்.
முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும், ஆனால் இஸ்லாமிய வரம்புகளை மீறுகின்ற பொழுது அவர்கள் பண்படுத்தப்பட வேண்டும். இறைவனின் இஸ்லாத்தை மிதிக்கும் பல்கலைக்கழக கல்வி முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு அவசியமில்லை, அவ்வாறு கற்கும் பட்சத்தில் அவர்கள் சமூகத்தின் வீழ்ச்சிக்கும் அவப்பெயருக்குமே காரணிகளாக திகழ்வார்கள்.
அன்பாரந்த மாணவிகளே..! சகோதரிகளே..!
இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களில் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவிகளா நீங்கள்..? நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு அமைப்பை உருவாக்குங்கள். உங்களுக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுப்பதற்காக மாத்திரல்ல. மாறாக பல்கலைக்கழகங்களில் மட்டகரமான நடத்தைகளில் ஈடுபடும் பெண்களை இனங்கண்டு தகுந்த தண்டனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் சிறந்த ஆற்றுப்படுத்தல்களையும் வழங்குங்கள். முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய மயப்படுத்தலுக்கான அனைத்து செயற்பாடுகளையும் அமுலுக்கு கொண்டு வர அணிதிரளுங்கள். நிச்சயமா இஸ்லாமிய பெண் ஆளுமைகள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.இன்ஷா அல்லாஹ்...!
அல்லாஹ் எழுதுகிற என்னையும் வாசிக்கிற உங்களையும் நேரான வழியில் வாழ்ந்து மரணிப்பதற்கு அருள் புரிவானாக..!
Dear none ever disputed muslim girls studying...Bu there is a limit what to study and what faculties they choose so that they would not be mingling with men.The same fathers would have to cry later if they dont understand this
ReplyDeleteIf anyone can to build up Islamic university to get a environment of our beloved prophet made.it will strengthen our faith otherwise results will be
ReplyDeleteWorse.