டிரம்பின் உற்பத்திகளை, அமெரிக்கர்கள் புறக்கணிக்கிறார்களா..?
தனது மகளுக்கு சொந்தமான ஆடை அலங்கார உற்பத்திகளை நிராகரித்த ஆடை விற்பனை நிறுவனம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சாடி இருப்பது குறித்து ஜனநாயக கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஆடை விற்பனையாளர் நோர்ட்ஸ்டோம், “இவன்காவை நியாயமற்ற முறையில் நடத்தியது” என்று டிரம்ப் தனது டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
இது பொருத்தமற்ற செயல் என்று ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதோடு, ‘மூர்க்கத்தனமானது’ என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் நெறிமுறை ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவன்கா டிரம்பின் ஆடைகள் போதிய விற்பனை இல்லை என்று இந்த மாதத்திற்குள் மாத்திரம் அதனை வாங்காத ஐந்தாவது ஆடை விற்பனை நிறுவனமாக நோர்ட்ஸ்டோம் உள்ளது. டிரம்ப் உற்பத்திகளை புறக்கணிக்கும் பிரசாரம் இடம்பெறும் நிலையிலேயே இந்த உற்பத்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவன்கா டிரம்ப் வர்த்தகக் குறி 2016 கடைசி பாதி ஆண்டு தொடக்கம் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் அதன் விற்பனையை தொடர்வதில் வணிகப் பயன் இல்லை என்று நோர்ட்ஸ்டோம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. டிரம்ப் நிறுவனத்துக்கு அப்பால் இவன்கா டிரம்ப் தனது பெயரில் ஆடை மற்றும் ஆபரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
So Called US Democrazy is getting exposed to the world.
ReplyDelete