''தேசத்துக்குத்தான் முன்னுரிமை, கட்சிக் கூட்டத்துக்கு அல்ல” - பஷீர்
பிற்குறிப்பு - எந்தவொரு தனிநபரினதும் மானத்தை போக்கு வகையில், அல்லது குறைகாணும் வகையில் இங்கு பஷீர் சேகுதாவூத் கருத்து வெளியிடாமையால், இந்த செய்தி இங்கு பதிவேற்றம் செயய்பட்டுள்ளது.
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்ற தினத்தன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்குச் செல்லவேண்டியிருந்தது. அன்றையதினம், தேசத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருந்ததே தவிர, கட்சிக் கூட்டத்துக்கு அல்ல” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
“சட்ட ரீதியான சில பிரச்சினைகள் காரணமாக, தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் கூறித்துக் கூறுவது, சிறிது கடினமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் சனிக்கிழமை (04) இரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்வதாக ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த உயர்பீடக் கூட்டத்துக்குத் தான் சமுகமளிக்காமை பற்றி அவர் கூறியபோது,
“அன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு செல்லவேண்டியிருந்தது. அது சுதந்திர தின நிகழ்வு ஆகையால், தேசத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருந்ததே தவிர, கட்சிக் கூட்டத்துக்கு அல்ல. எனவே, இது குறித்து நான் ஏற்கெனவே கடிதம் மூலம் கட்சித் தலைமைக்கு அறிவித்திருந்தேன். மட்டக்களப்பு நிகழ்வில், இலங்கையின் சுதந்திரத்துக்கு சிறுபான்மை மக்கள் செய்த பங்களிப்புத் தொடர்பாக எனக்கு ஓர் உரை வழங்கப்பட்டிருந்தது. உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் வருவதற்கு முன்னரே, நான் குறித்த சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்துவதாக வாக்குக் கொடுத்திருந்தேன்” என்றார்.
தயவு செய்து உங்களுக்கு முக்கியமில்லாத இந்த கட்சியின் விடயங்களில் உங்கள் மூக்கை நுளைத்து நயவஞ்ஞகம் செய்யமுனையாதீர்கள் அதை யாருக்கு முக்கியமோ அவர்களின் பொறுப்பில் விட்டுவிடுங்கள் எட்டாக் கணிக்கு ஆசைப்படாதீர் இப்படியானால் நீங்கள் ஒரு நல்ல மனிதனுக்கு எடுத்துக்காட்டாகுவீர்!
ReplyDelete