Header Ads



இஸ்லாம் கூறும் விடயம், எனக்கு நன்கு தெரியும் - மஹிந்த

என்­னுடன் இருந்த ஓரி­ருவர் செய்த தவறின் கார­ணத்­தினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் என் மீது வெறுப்­புக்­குள்­ளா­னார்கள். அதன் பிர­தி­பலனே 2015 ஜன­வரி 8 ஆம் திகதி நடந்த தேர்­த­லிலும் ஆகஸ்டில் பொதுத் தேர்­த­லிலும் அடைந்த தோல்வி என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் கூட்­ட­மொன்று குரு­நாகல் மல்­ல­வப்­பிட்­டி­யவில் முன்னாள் குரு­நாகல் பிர­தேச சபை உறுப்­பினர் அமானின் ஏற்­பாட்டில் முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் அப்துல் சத்தார் தலை­மையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசு­கையில், 

இன்று இலங்கை மக்கள் 69 ஆவது சுதந்­திர தினத்தை மிகவும் மன­வ­ருத்தத்­துடன் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நாட்டின் சுதந்­தி­ரத்தை சிங்­க­ளவர் மட்­டு­மல்ல, முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் மற்றும் ஏனைய  சமூ­கத்­தி­னர்­களும் சேர்ந்துதான் பெற்­றார்கள்.

இவற்றை நாங்கள் மறக்க முடி­யாது. இன்று இரவில் சுதந்­தி­ர­மாக கூட்­டத்தை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்­கின்றோம். நாட்டில் பயங்­க­ர­வாதம் இருந்தால் இப்­ப­டி­யான கூட்­டத்தை நடத்த முடி­யுமா? இந்த நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு சிங்­கள இனத்­தவர் மட்டும் உயிர்த் தியாகம் செய்­ய­வில்லை. பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­க­ளையும் ஏனை­யோ­ரையும் மறக்க முடி­யாது. 

நாங்கள் நடத்­திய போராட்டம் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவோ ஏனை­யோர்­க­ளுக்கு எதி­ரா­னதோ அல்ல. அது பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­ன­தாகும். இன்று அதைவிட மிகவும் மேலா­ன­தொரு யுத்தம் செய்ய வேண்டி இருக்­கி­றது. அந்த யுத்தம் மக்­களின் பட்­டி­னிக்கு எதி­ரான யுத்­த­மாகும்.

எமது நாட்டில் என்­னு­டைய ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் பொரு­ளா­தார ரீதியில் மிகவும் சந்­தோ­ச­மாக இருந்­தார்கள். இன்று  இந்த நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளு­டைய பொரு­ளா­தாரம் மட்­டு­மல்ல, முஸ்­லிம்­க­ளு­டைய வியா­பா­ரங்­களும் வீழ்ச்சி கண்­டுள்­ளன.

அத்­துடன், சூழ்ச்­சி­க­ர­மான முறையில் முஸ்­லிம்­களை என்­னி­ட­மி­ருந்து பிரித்­தார்கள். என்­னோடு இருந்த ஓரி­ருவர் செய்த தவறின் கார­ணத்­தினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் வெறுப்­புக்கு உள்­ளா­கினேன். அதன் பிர­தி­ப­லன்தான் ஜன­வரி  8 ஆம் திகதி நடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பின்­ன­ரான பொதுத் தேர்­த­லிலும் அடைந்த தோல்வி. 

எனக்கு இஸ்லாம் கூறும் விடயம் நன்கு தெரியும்.  அசத்­தியம் நிச்­ச­ய­மற்­றது .

ஒரு நாளைக்கு நிச்­சயம் சத்­தியம் வெல்லும் என்­பதை நான் அறிந்­துள்ளேன். என் முன்னால் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் மக்கள் திரண்டு வந்து நிற்­பதைப் பார்க்கும் போது இன்று சத்­தியம் உண்மை வெல்­லப்­பட்­ட­தாக நான் உணர்­கின்றேன்.

என்­னு­டைய எதிர்­கால ஆட்­சியில் இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளையும் ஏனைய சமூ­கங்­க­ளையும் இந்த நாட்டில் ஒரு கௌர­வ­மான பிர­ஜை­க­ளாக வாழ்­வ­தற்­கு­ரிய சூழலும் சுபிட்­சமும் நிரந்­த­ர­மாக வழங்­கப்­படும் என்­பதை உறு­தி­படத் தெரிவித்துக் கொள்கின்றேன்  என்றார்.

- இக்பால் அலி  -

8 comments:

  1. What nonsense MR is trying say. It is during his time that several Muslims businessmen were kidnapped and released after payment big sums of ransom. Some even fled the country. Muslims importers were charged higher rates by the Customs. It is during his time media personnel were threatened and some were killed or abducted and still missing. It is during his time the worst of communal attacks against Muslims occurred. Abdul Sathar was crying about these at that time and now he is singing a different song. Muslims should not be misled by MR's dishonest words.

    ReplyDelete
  2. நிச்சயம் தேர்தல் வரும் நீ அதில் தோற்றிடுவாய். வாக்களித்த மக்களெல்லாம் அமுத பின்னே நீ வீட்டிற்கு சென்றிடுவாய்.

    ReplyDelete
  3. muslimkal orupothum paksa kudumpathu vakkau alikkamadarkal...
    overu muminana muslimmum pakkasa kudumpathil irtunthu padam katravarkal...........Allahu AKKABAR

    ReplyDelete
  4. A Good Effort to TRAP the Muslim votes... BUT only ONE LESSON for us enough..

    As you could not control the RACISM prevailed against Muslim during your ruling in the past.. You will repeat the same again. This is our understanding from the lesson learned.

    Thanks for your positive words toward Muslim BUT we are sorry to say that we will not support you (excluding the Sattar Nana and Aswar Mama)

    ReplyDelete
  5. The dots of the tiger never changed.
    Rajapaksa is dreaming and trying to brain wash Muslims.
    We believe in Allah and His sustenance.
    MR's gimmicks may work with others but not with us.

    ReplyDelete
  6. Over 70% of Srilankan believed in what BBS had to say about Islam and Muslims we know that this is not true but what I am trying to say is we have a lot of work to do not with My3 I’m taking about developing a good character , nobility……Spread Islam in srilanka one man show…………………………….my dear brothers and sister see your common above than how can we spread Islam in Srilanka………….your all became good politician that’s true but your all not a perfect Muslims

    ReplyDelete
  7. மகிந்த விட்ட தவறை...............

    தற்போதய அரசும் ஜனாதிபதியும் தங்களது மெத்தனப் போக்கின் காரணமாகத் தொடர்ந்தேச்சியாகச் செய்துகொன்டே இருப்பார்களானால் ................

    மகிந்தவும் தனது தவறை உணர்ந்து அதனை திருத்திக்கொன்டு முஸ்லீம்களுடனான உறவை அவர் பலப்படுத்திக் கொள்ள முனைந்தால்............

    எதர்காலத்தில் மகிந்ததாதன் நமது தெரிவாக அமைவதில் ஆச்சரியம் இருக்க முடியாது............

    இவை தற்போதய அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேன்டும்......

    ReplyDelete

Powered by Blogger.