நுவரெலியாவில் உறைபனி
இலங்கையில் அண்மைக்காலமாக மாறுபட்ட காலநிலை வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் கடும் வறட்சியும், சில பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுகிறது. கொழும்பு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரான காலநிலை நிலவுகிறது.
இவ்வாறான காலநிலை அடுத்து வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளின் நிலத்தை உறைபனி மூடியிருக்குமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நுவரெலியா, கந்தப்பளை, ஹைபொரஸ்ட், நானுஓயா, ரதல்ல போன்ற இடங்களிலுள்ள தோட்டங்களில் தேயிலை கொழுந்துகள் கருகிப் போயுள்ளது.
தற்போது நுவரெலியாவில் இரவில் வழமை நாட்களை விட குளிர் அதிகமாகவும் பகலில் சூரிய வெப்பம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் மீண்டும் உறைபனி பொழிவதற்கு ஆரம்பித்ததையடுத்து இப்பகுதி மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment