ட்ரம்பிற்கு இலங்கை இளைஞர், எழுதிய கடிதம்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, இலங்கை இளைஞர் ஒருவர் தனிப்பட்ட ரீதியில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மாத்தறையை சேர்ந்த ரக்கித ஹேமவர்தன என்ற இளைஞரே இவ்வாறு ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வறுமை குறைப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியே அவர் இந்த கடிதத்தை ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசாங்கத்தின் முயற்சியில் நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி சிறப்பான நிலையில் உள்ளது. எனினும் சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்த்துள்ளோம்.
தான் தீவிர ட்ரம்ப் ஆதரவாளர் என்ற ரீதியில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களை எதிர்வரும் காலங்களில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.
பிரபல நாடுகளின் அரச தலைவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள நபர்கள் தங்கள் தனிப்பட்ட ரீதியில், பிரச்சினை தொடர்பிலான கடிதங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இவ்வாறான கடிதங்களை படிப்பதற்காக ஒரு தனிப்பிரிவு செயற்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ரம்பிற்கு, தனது கடிதத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Post a Comment