Header Ads



சிறிலங்காவே ஆசியாவின் அடுத்த புலி – அமெரிக்கா புகழாரம்

ஆசியாவின் அடுத்த புலியாக மாறும் வாய்ப்பு சிறிலங்காவுக்கு இருப்பதாக,   அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின், பொது இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான பதில் அடிநிலைச் செயலர் புறூஸ் வாட்டன்  தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 69 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, வொசிங்டனில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வில், உரையாற்றிய அவர்,

“சிறிலங்காவின் இந்த வாய்ப்புக் குறித்து ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை. இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப் புலி சிறிலங்காவேயாகும். அதற்கான ஆற்றலை சிறிலங்கா பெற்றுள்ளது.

வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் சிறிலங்காவின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகிறது.

சிறிலங்காவில் ஜனநாயக முன்னேற்றம் ஏற்பட்டிருக்காவிடின், இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகியிருக்காது.

சிறிலங்கா வளர்ச்சியைப் பொறுத்து இளையதாக இருப்பினும், அமெரிக்காவும், சிறிலங்காவும் பழைய நண்பர்கள்.

21 ஆம் நூற்றாண்​டில் ஒரு நாட்டில் மிக முக்கிய சொத்தாக அதன் மக்களே இருப்பர். பெரிய சாதனைகளைப் புரியக்கூடிய அறிவுள்ள மக்களை, சிறிலங்காவினால் பெறக்கூடியதாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.