Header Ads



வடக்கு - கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களை நிம்மதியாக வாழ வழிவகுக்கும் - விக்னேஷ்வரன்


மட்டக்களப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள “எழுக தமிழ்” நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு தமிழ் பேசும் சகல மக்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலைநிறுத்துவதற்கே இந்த நடைபவனிக்கு “எழுக தமிழ்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களிடையே முரண்பாடுகள் திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு திணிக்கப்பட்டமைக்கு குறுகிய அரசியல் நோக்கங்கள் விதிவிலக்கன்று என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் பாதுகாப்புக் கருதியே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலமே தமிழ் பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்றும் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சமாதானம் இன நல்லுறவால் ஏற்பட்ட ஒன்று அல்லவெனவும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதனாலேயே பதவியில் உள்ளவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பெரும் அளவிலான இராணுவத்தை வைத்திருக்க விளைவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு தமிழர்களிடம் இருந்து கிடைக்காது என்று கூறி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்த சிலர் முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றையெல்லாம் களைந்து, தமிழ் பேசும் மக்களிடயே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. தமிழ் மக்களுடைய காணிகளை அரசாங்கத்திடம் இருந்து படிப்படியாக மீட்டி எடுத்துக்கொண்டு வருகிண்றீர்கள்.அதே போன்று முஸ்லீம் மக்களுடைய காணிகளை திரும்பவமும் அவர்களிடம் ஒப்படைப்பதட்கு என்ன முயட்சி எடுத்துள்ளீர்கள் .

    ReplyDelete
  2. ஆமாம் நாம் வேறு நாட்டில் தான் இருந்தோம்! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! ஏற்றுக் கொள்கிறோம்!யாழ்ப்பாணம் மன்னார் மற்றும் கிழக்கில் நீங்கள் நம்பிக்கை ஊட்டும் வண்ணம் தான் சேர்ந்து வாழ்ந்தீர்கள்! வடு சகோதரா, வடு. நம்பி வாழ்ந்த எம்மை முதுகில் குற்றியதை எம்மால் அவ்வளவு லேசா மறக்க முடியாது. அந்த நம்பிக்கையை வளர்க்க நீங்கள் பெரும் பாடு படவேண்டும். கிழக்கை வடக்குடன் சேர்க்க முன்னர் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் உண்மையாக நடந்து உங்களை நிரூபியுங்கள். மீள்குடியேற்ற விடயங்களில் 'பெரும்பான்மைக்குப்' பின்னால் நீங்கள் காய் நகர்த்துவது பற்றி நாம் ஒன்றும் அறியாமல் இல்லை. சில இடங்களில் சொந்தக் காணிகளைப் பிடிங்கி கொண்டு தருகிறீர்கள் இல்லை. இன்னும் சில இடங்களில் சொந்தக் காணிகளுக்கு செல்லும் போது இலை மறை காய் விளையாட்டு.
    கிழக்கில்; எமது நிலங்களை நாம் மறக்க வேண்டியது தான். தமது உல்லாசங்களுக்காக அலைந்துகொண்டிருக்கும் எமது அரசியல் வாதிகள் இதையா பெற்றுத் தரப் போகிறார்கள்?

    ReplyDelete
  3. Let him allow Displaced North Muslims back to their own land fully to trust his saying of unity.

    ReplyDelete
  4. Mr.Viknesvaran as Muslim we know how you will treat if north+south joint! We didnt forget 1989!

    ReplyDelete
  5. Mr.Viknesvaran as Muslim we know how you will treat if north+south joint! We didnt forget 1989!

    ReplyDelete
  6. Dear Admin Please allow me to post.

    போடா பேயா.....
    இந்த நாய் ஒரு பெரிய இனவாதி
    முதல் இந்த நாய வீட்டுக்கு அணுப்போனும்

    ReplyDelete
  7. Pl do not shed crocodile tears. You try to show the world that you are a champion of the Human Rights. But what did you all do when the muslims,having been residing for over a hundred years, were ethnically cleansed from the Tamil majority areas. The history will reveal what really happened. Sham on you.

    ReplyDelete

Powered by Blogger.