சிறிலங்கா பொலிஸ், என்றால் சும்மாவா..?
கொழும்பில் வெளிநாட்டவர் ஒருவர் தவறவிட்ட பயண பொதி தொழில்நுட்ப உதவி மூலம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை வரை பயணித்த ரயிலில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டு ஜோடிக்கு சொந்தமான பயண பொதியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக காலி குற்றவியல் பிரிவு பொதியை கண்டுபிடித்துள்ளதுடன், உரிய வெளிநாட்டு ஜோடியிடம் ஒப்படைத்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் தனது காதலியுடன் காலிக்கு செல்வதற்காக கொழும்பில் இருந்து மாத்தறை வரை பயணித்த ரயிலில் ஏறியுள்ளனர். ஹிக்கடுவ ரயில் நிலையத்தை கடந்து ரயில் கடக்கும் போது இந்த ஜோடியின் பை ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளது.
அதன் பின்னர் காலி ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிய வெளிநாட்டு ஜோடி, அங்குள்ள ரயில் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரியை சந்தித்து முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய குறித்த வெளிநாட்டு ஜோடி காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் உடனடியாக செயற்பட்ட காலி குற்ற விசாரணை பிரிவு காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் இணைந்து, பொதியிலிருந்த தொலைப்பேசிக்கு அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக கையடக்க தொலைப்பேசியை அடையாளம் கண்டுபிடித்த பொலிஸ் அதிகாரிகள் தொனடன்துவ பிரதேசத்தில் ரயில் வீதிக்கு அருகில் இந்த பொதி கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அந்த பொதி உரிய நபரிடம் பொலிஸார் வழங்கியுள்ளனர். முக்கிய ஆவணங்களுடனான அந்த பொதியை கண்டுபிடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜோடி தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
Post a Comment