தவறாக அர்த்தப்படுத்தப்படும் ''அல்லாஹீ அக்பர்'' - சவூதி இளவரசி
-விடிவெள்ளி + எம்.ஐ.அப்துல் நஸார்-
'அல்லாஹு அக்பர்'- அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற இஸ்லாமிய தக்பீர் முழக்கம் மகிழ்ச்சி, துக்கம், கவலை, ஏமாற்றம், அதிர்ச்சி போன்ற அனைத்து உணர்ச்சி நிலைகளிலும் உச்சரிக்கப்படுகின்ற வார்த்தை.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை நிறம், இனம் என்பவற்றுக்கு அப்பால் நம்பிக்கை, - ஈமான் - என்ற புள்ளியில் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் வார்த்தை. ஐவேளை தொழுகை முதல் அன்றாட கடமைகள் வரை மனநிறைவோடு உச்சரிக்கும் வார்த்ததையே அல்லாஹு அக்பர்.
இன்று இந்த வார்த்தை பயங்கரவாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதோடு முஸ்லிம்களுக்கெதிரான மனப்பதிவுகளை உருவாக்குவதற்கும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுவருவதை உலகம் தற்போது உணர்ந்துள்ளது. அன்றாடம் பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதல்களை நடாத்தும்போதும், தலைகளை வெட்டி கொலைகளை செய்யும்போதும் இந்த வார்த்தையை பயன்படுத்தப்படுவதை செய்திகளிலும் காணொளிகளிலும் காண்கிறோம்.
சவூதி இளவரசி அமீராஹ் அல் தவீல் உலகில் வாழும் 1.8 பில்லியன் முஸ்லிம்களும் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையினால் எதனை உணர்கிறார்கள் என்பதை அண்மையில் ஒரு காணொளியில் விளக்கியுள்ளார்.
'' பயங்கரவாதிகளும் அடிப்படைவாதிகளும் 1.8 பில்லியன் முஸ்லிம்கள் அன்றாடம் மிக விருப்புடனும் கூருணர்வுடனும் உச்சாடனம் செய்யும் பல வார்த்தைகளை கபளீகரம் செய்துகொண்டு முஸ்லிம்கள் போல் வேடமணிந்து அவர்களும் அவ்வாறே உச்சரிக்கின்றனர். அதன் உண்மைத் தன்மையையும் தவறான புரிதலையும் சுமார் இரண்டரை நிமிட காணொளி தெளிவுபடுத்துகின்றது.
மிகக் கண்ணியமான வார்த்தையை கேவலமானவர்கள் உச்சரிப்பதை பார்த்தும் கேட்டும் நாம் குழம்பிவிடக் கூடாது. பயங்கரவாதிகள் இந்த வார்த்தையினை மாசுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது. இல்லாத்தின் உண்மைத் தன்மையை உலகுக்கு உணர்த்தச் சொல்வோம் - உரத்துச் சொல்வோம் - அல்லாஹு அக்பர்.''
கடந்த 2016 மே மாதம் 'நல்ல விடயங்களுக்கான உந்து சக்தியும், மனிதகுலத்திற்கான செய்தியும்' என்ற தலைப்பில் அரப் மீடியா போரத்தின் இரண்டாம் நாள் அமர்வில் சவூதி இளவரசி அமீராஹ் அல் தவீல் தனது காணொளியை காட்சிப்படுத்தும்போது 'இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை மீள நிலைபெறச் செய்வதும் தவறான பொருள்சார்ந்து உச்சரிக்கப்படும் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையில் மிகச் சரியான அர்த்தத்தை விளக்குவதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்' என்றார்.
'இஸ்லாம் மிக எளிமையான அடையாளங்களைக்கொண்ட அழகான மார்க்கம்' என சுட்டிக்காட்டிய அமீராஹ் அல் தவீல் 'அல்லாஹு அக்பர்' என்ற வார்த்தை பிராந்தியத்தில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும், அடிப்படைவாதிகளின் வன்முறைகளுக்கும் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றது என்பதையும் விளக்கினார். ''புள்ளி விபரங்களின்படி, ஒரு வருடத்தில் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தை சமூகவலைத் தளங்களிலும் தேடல் பொறிகளிலும் 79 மில்லியன் தடவைகள் தேடப்பட்டுள்ளன'' எனவும் அமீராஹ் அல் தவீல் குறிப்பிட்டார்.
''இதன் மூலம் எமக்குத் தெரியவருவது என்னவென்றால், உலகிலுள்ள மக்கள் இஸ்லாத்தைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர். முஸ்லிம்கள் என்ற வகையில் இஸ்லாத்தை பாதுகாப்பதும், அதன் அழகை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் ஒவ்வாருவரினதும் தனிப்பட்ட கடமையாகும்''''ஆய்வு நிலையங்கள் நிறுவப்படுவதிலும் நூதனசாலைகளை அமைப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த முயற்சிகள் தனி நபர்களின் வெறுப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் மழுங்கடிக்கப்பட்டுவிடுகிறது'' எனவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாம் தொடர்பான மக்களின் மனப்பதிவு எவ்வாறு இருக்கிறதென டுவிட்டர் சேவையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றினை மேற்கோள்காட்டிப் பேசிய அமீராஹ் அல் தவீல், 12 வீதமான பயனாளர்கள் தமக்கு இஸ்லாம் தொடர்பில் எதிர்மறையான பார்வை இருப்பதாகவும் ஐந்து வீதமானோர் உடன்பாடான பார்வை இருப்பதாகவும் 83 வீதமானோர் தமக்கு நடுநிலையான பார்வை இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
வெறுமனே 12 வீதமான பயனாளர்களுக்கே இஸ்லாம் பற்றிய எதிர்மறையான பார்வை இருக்கிறது. அரபுலகில் உள்ள 280 மில்லியனுக்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகள் இஸ்லாத்தில் உண்மையான விம்பத்தை உலகிற்கு உணர்த்த உதவ முடியும் எனவும் அவர் தெரிவித்தார். சிதைவடைந்துள்ள இஸ்லாம் தொடர்பான புரிதலை சீர்செய்யத் தினமும் இஸ்லாமிய வழிகாட்டல் தொடர்பான பதிவொன்றை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யுமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
மிகவும் பொருத்தமான கருத்து
ReplyDeleteI can see her hair
ReplyDeleteMay Allah Guide this sister back into HIJAB life.
ReplyDelete