எவர் எப்படி குரைத்தாலும் - டிலான்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால், கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அதனை நிராகரிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவை தவிர வேறு நபர்கள் கூறுவது போல் வேலையை செய்ய ஜனாதிபதிக்கு முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு தேவையான வகையில் கட்சி தீர்மானங்களை எடுப்பதில்லை.
நாட்டில் இரத்தம் சிந்தாமல் புரட்சி செய்த இரண்டு தலைவர்கள் இருக்கின்றன். ஒருவர் ஆர். பிரேமதாச மற்றையவர் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலருக்கு மாத்திரமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில அணிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியலில் இருந்து அகற்றும் தேவை உள்ளது.
தற்போது எவர் எப்படி குரைத்தாலும் குமார வெல்கமவை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் எவரும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிராக பேசவில்லை எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment