''எவ்விதக் குற்றச்சாட்டுகளையும், எமக்கு முன்வைக்கவில்லை''
-ப. பிறின்சியா டிக்சி-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவி, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் மற்றும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தவிசாளர் பஷீர் சேகுதாவுத்க்கு எதிரான விசாரணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், அடுத்த கட்சியின் உயர்பீட கூட்டத்திலேயே, தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மேற்படி விவகாரங்கள் தொடர்பில், கட்சியின் பொதுச் செயலாளர் - மன்சூர் ஏ. காதிரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
27ஆவது பேராளார் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் முறைப்படி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனினும், காங்கிரஸின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரினால், பேராளர் மாநாட்டுக்கான அழைப்பிதழ் தொடர்பிலும் விசமத்தனமாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
“தற்போதுதான் பேராளர் மாநாட்டை நாங்கள் நடத்தி முடிந்திருக்கின்றோம். இதற்குப் பிற்பாடு பஷீர் சேகுதாவுத் விடயம் தொடர்பில் உயர்பீடம்தான் முடிவெடுக்கும்.
பேராளர் மாநாட்டில் அழைப்பிதழ்கள் கிடைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. மு.கா.வினுடைய எதிரிகள், பத்திரிகைகளில் இணையத்தளங்களில் அவ்வாறு எழுதுகின்றார்கள். ஆனால், எங்களுடைய உறுப்பினர்கள் எவ்விதக் குற்றச்சாட்டுகளையும் எமக்கு முன்வைக்கவில்லை.
பேராளர் மாநாட்டுக்கு, இறந்தவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாக, கிழக்கு மாகாணத்திலிருந்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது, மு.கா.வின் தலைமைக்கும் கட்சிக்கும் எதிராக இயங்குகின்ற ஊடகவியலாளரால் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அது தொடர்பில் பதில் கூற வேண்டிய அவசியம் எமக்கு இல்லை” என்றார்.
மன்சூர் ஏ காதர் அவர்களே, நீங்கள் கூலிக்கு மாரடிப்பவர். சமூகத்துக்காக, மக்கள் பிரதிநிதியாக பேசுவதட்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழந்த கையாலாகாதவர். மாபெரும் ஊழலில் ஈடுபட்டருக்கு தான் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டி இடுவதட்கு தடை விதிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சூடு, சொரணை, ரோசம், தன்மானம் இருந்தால் தயவு செய்து இந்த பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். இப்படி ஒரு பதவி அரசியல் பொன்னத்தனமானதும், மிகவும் மோசமான உதாரணமும் ஆகும்.
ReplyDeleteமன்சூர் ஏ காதர் அவர்களே, நீங்கள் கூலிக்கு மாரடிப்பவர். சமூகத்துக்காக, மக்கள் பிரதிநிதியாக பேசுவதட்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழந்த கையாலாகாதவர். மாபெரும் ஊழலில் ஈடுபட்டருக்கு தான் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டி இடுவதட்கு தடை விதிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சூடு, சொரணை, ரோசம், தன்மானம் இருந்தால் தயவு செய்து இந்த பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். இப்படி ஒரு பதவி அரசியல் பொன்னத்தனமானதும், மிகவும் மோசமான உதாரணமும் ஆகும்.
ReplyDeleteyes your right Kuruvi
ReplyDeleteசுருக்கமாக சொல்வதாயின் வேசத்தனமான பதவி.
ReplyDeleteநாட்டின் அரசியல் யாப்பைத் திருத்தும் போது அதிலே முஸ்லிம் அடையாளம் பற்றி யோசிக்க நேரமில்லை. கட்சியின் யாப்பைத் திருத்தி இருந்த சர்வாதிகாரத் தன்மையை மேலும் உயர்த்திக் கொண்டார் தலைவர். அவரோடு சில அடிவருடிகளும் கூட. இந்த கேடுகெட்ட கட்சிஇக்கு ஒரு மக்கள் போராளிகள் வேறு. மு. கா. கட்சியை அமான் அஷ்ரபின் தலைமையில் ஒன்று திரட்டி மீழக் கட்டியெழுப்புவோம்.
ReplyDeleteநாட்டின் அரசியல் யாப்பைத் திருத்தும் போது அதிலே முஸ்லிம் அடையாளம் பற்றி யோசிக்க நேரமில்லை. கட்சியின் யாப்பைத் திருத்தி இருந்த சர்வாதிகாரத் தன்மையை மேலும் உயர்த்திக் கொண்டார் தலைவர். அவரோடு சில அடிவருடிகளும் கூட. இந்த கேடுகெட்ட கட்சிஇக்கு ஒரு மக்கள் போராளிகள் வேறு. மு. கா. கட்சியை அமான் அஷ்ரபின் தலைமையில் ஒன்று திரட்டி மீழக் கட்டியெழுப்புவோம்.
ReplyDelete