Header Ads



குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியின் மூலம், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி, பயிற்சி பெறாத ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதாந்தம் குறைந்தது 350 அமெரிக்க டொலராகவும், பயிற்சி பெற்ற ஊழியர்களின் சம்பளம் 450 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச இந்த சம்பளம் இன்றி இலங்கையர்களை நாட்டை விட்டு அனுப்புவதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதியளித்துள்ளது.

இலங்கையின் 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கமைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.