ஏமாற்றமடைந்த ஹசன் அலி வெளியேறினார், புதிய தவிசாளர் இல்லை..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12) பேராளர் மகாநாட்டில் பரிந்துரை செய்து ஏற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் தவிசாளர் பதவிக்கு எம்.ரி. ஹஸன் அலியின் பெயர் உயர்பீட உறுப்பினர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஹஸன் அலி முற்றாக மறுத்து, நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில்,அதிகாரமிக்க செயலாளர் பொறுப்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்தும் மன்சூர் ஏ காதரே அதிகாரபூர்வ செயலாளராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, தான் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கப் போவதாகவும் தனக்கு எவ்வித பதவிகளும் இனித் தேவை இல்லை எனவும் தெரிவித்து இறுதிக் கட்டத்தில் ஹஸன் அலி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு பிரதிச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அலி ஸாஹிர் மௌலானா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமே தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயற்பட வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்ததனையடுத்து அல்லாஹு அக்பர் என கூறப்பட்டு அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
Ethellam oru pilappu
ReplyDeleteSubahanallah.allahu akbar words we must continue in everyday FAJR PRAYERS.NOT ONLY IN DHARUSSALAM
ReplyDeleteதாய் வேர் உறுதியாயின்
ReplyDeleteதரு என்றும் உறுதியே!
தரணியை ஆழத் தேவையானது
குர்ஆன்+ஸுன்னா வழி ஓன்றே!
முஸ்லிம் பெயர் தாங்கினால்
முன்னுதாரண ஆட்சி வேண்டுமே!
உமர் போன்றதோர் ஆட்சியை
உம்மத்திற்குத் தந்திடுங்கள்!
உங்கட ஆணி வெர் தலைவரிடமிருந்து உமரின் ஆட்சியை எதிர் பார்கிரப் போல்
Delete