Header Ads



முஸ்லிம் எம்.பி.க்களினால், என்ன பிரயோசனம்..? (வாக்களித்த மக்களே, இதனை வாசிப்பீர்)

-SNM.Suhail-

முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை சந்­தித்­தன. இதன்­போது அவர் குறிப்­பிட்ட முக்­கிய விடயம் எம் சமூ­கத்தை சிந்­திக்க தூண்­டியுள்ளது. 

அதா­வது, தமிழ் அர­சியல் தலை­மைகள் போன்று முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் சமூக பிரச்­சினை விட­யத்தில் செயற்­ப­டு­வ­தில்லை எனும் கருத்தை அவர் கூறி­யி­ருக்­கின்றார். அத்­துடன் தமிழ் தலை­மைகள் போன்று செயற்­பட சிவில் அமைப்­புகள் முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்­ப­தையும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். பிர­த­ம­ராக ஒரு தட­வையும் ஜனா­தி­ப­தி­யாக இரு தடை­வையும் நாட்டை நிர்­வ­கித்த ஒரு சிங்­கள பௌத்த தலைவி, தமிழ் தலை­மை­களை முஸ்­லிம்க­ளா­கிய எமக்கு உதா­ரணம் காட்­டு­கிறார் என்றால் நமது நிலைமை என்ன? நாம் எங்கு இருக்­கிறோம்? எமது தலை­மைகள் எங்கு இருக்­கின்­றன?சந்­தி­ரிக்கா அம்­மையார் குறிப்­பிட்­டதை நாம் மேலும் கவ­னிப்போம், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உங்­களைப் போன்ற ஒழுங்­க­மைப்­புடன் இயங்கும் சிவில் அமைப்­புக்கள் அழுத்தம் கொடுத்து இப்­பி­ரச்­சி­னை­களை அரசின் கவ­னத்­திற்கு கொண்­டு­வர வேண்டும். தமிழ்த் தலை­வர்கள் போன்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் செயற்­பட அழுத்தம் கொடுங்கள் என சிவில் அமைப்­பு­களை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

 www.manthri.lk என்ற இணை­யத்­தளம் மேற்­கொண்ட ஆய்­வு­களின் அடிப்­ப­டை­யி­லான முடி­வு­களை வைத்து ஆராய்வோம். அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்ற செயற்­பா­டு­களில் பங்­கு­பற்­று­வதன் அடிப்­ப­டையில் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 

இதில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம் (28), ரிஷாத் பதி­யுதீன் (38), முஜிபுர் ரஹ்மான் (39), எஸ்.எம்.மரிக்கார் (42), கபீர் ஹாஸிம் (51), எம்.எச்.எம்.நவவி (57), அப்­துல்லாஹ் மஹ்ரூப் (72), பைஸர் முஸ்­தபா (93), அலி­சாஹிர் மௌலானா (100), எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் (103), ஏ.ஆர்.இஷாக் (115), இம்ரான் மஹ்ரூப் (133), ஏ.எச்.எம்.பௌஸி (136), எம்.எச்.எம்.சல்மான் (144), எம்.ஐ.எம்.மன்சூர் (153), அமீர் அலி (155), காதர் மஸ்தான் (162), எம்.எச்.அப்துல் ஹலீம் (163), பைஸல் காஸிம் (166), எம்.எம்.ஹரீஸ் (193), பாரா­ளு­மன்ற பத­வியை இரா­ஜி­னாமா செய்த டாக்டர் ஏ.ஆர்.ஹபீஸ் (211), எம்.எஸ்.தௌபீக் (217) என்ற அடிப்­ப­டையில் தரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். இதனை மேலும் தெ ளிவாக விளக்­கப்­படம் மூலம் காட்­டி­யி­ருக்­கிறோம். 

இதே­வேளை, ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தியும் எந்­தெந்த துறை விவா­தங்­களில் கலந்­து­கொண்டு பேசி­னார்கள் அல்­லது கேள்வி எழுப்­பி­னார்கள் எனும் அடிப்­ப­டை­யிலும் மேலும் தரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவற்றில் முன்­னிலை வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளையும் அவர்கள் பெற்­றி­ருக்கும் நிலையை அடைப்­புக்குள் குறித்து விளக்­கப்­ப­டத்­துடன் காட்­டி­யி­ருக்­கிறோம். 

இதில் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்­டிய பல விட­யங்கள் இருக்­கின்­றன.  அமைச்சர் ஹக்கீம் 7 விட­யங்­களில் மாத்­திரம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே முதல் மூன்று இடத்­திற்குள் இருக்­கிறார். அடுத்­த­ப­டி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் 6 தலைப்­பு­களின் கீழும் கொழும்பு மக்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுடன் தொடர்­புடை விவ­கா­ரங்­களில் அதி­க­மாக பங்­கு­கொண்­டி­ருக்­கிறார். அத்­துடன் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் அவ­ரு­டைய அமைச்­சுடன் தொடர்­பு­டைய தலைப்­புக்­க­மை­யவே அதி­க­மாக செயற்­பட்­டி­ருக்­கிறார். முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் கபீர் ஹாஸிம் பொரு­ளா­தாரம் மற்றும் வர்த்­தக துறை உள்­ளிட்ட விட­யங்­க­ளி­லேயே அதிக கவனம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.

முஸ்லிம் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இம்ரான் மஹ்­ரூப்தான் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே கல்வி, சமூக சேவைகள் மற்றும் நல­னோம்பல் விட­யத்தில் அதி­க­மாக பாரா­ளு­மன்றில் பேசி­யி­ருக்­கிறார் , கேள்வி எழு­ப்பி­யி­ருக்­கிறார். அது­மட்­டு­மின்றி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே இவர்தான் அதிக தலைப்­பு­களின் கீழ் அமர்­வு­களில் பங்­கு­பற்றி உரை­யாற்­றி­யி­ருக்­கிறார். 

கட்­சி­க­ளுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதி­யுதீன் ஆகியோர் அவ­ர்களது அமைச்­சுக்­க­ளுக்கு கீழுள்ள துறை­களில் மாத்­திரம் அதிகம் கவனம் செலுத்­து­வதை manthri.lk இணை­யத்தில் கண்­கா­ணிப்பின் அடிப்­ப­டையில் தெரி­ய­வ­ரு­கி­றது. 

இடம்­பெ­யர்ந்த மக்­களின் வாழ்க்கை குறித்து அதிக கவனம் செலுத்­து­வ­தாக கூறி­வரும் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் 37 ஆவது இடத்­திலும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாவும் 39 ஆவது இடத்­தி­லேயே இருக்­கிறார்கள். இவர்­களை விட இம்ரான் மஹ்ரூப், அலி­சாஹிர் மௌலானா, அப்­துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நாம் தந்­தி­ருக்கும் அட்­ட­வ­ணைக்கு மேல­தி­க­மாக மீள்­கு­டி­யேற்ற விவ­கா­ரத்தில் முன்­னி­லையில் இருக்­கின்­றனர். 

இது இவ்­வா­றி­ருக்க அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மிகவும் பின்­தங்­கி­யி­ருப்­பது முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அதி­க­மாக இருக்கும் மாவட்ட பிர­தி­நி­தி­களின் நிலை­மையை காட்­டு­கி­றது. அதுவும் அங்­குள்ள இரு பிர­தி­ய­மைச்­சர்­க­ளி­னது நிலை மோச­மா­கவே இருக்­கி­றது. இன்­னொரு விட­யத்தை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும். அதா­வது, முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசி­யப்­பட்­டியல் சர்ச்சை இன்னும் தீராத  நிலையில் தேசி­யப்­பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யி­ருக்கும் எம்.எஸ்.தௌபீக் இரு தலைப்­பு­க­ளுக்கு கீழேயே உரை­யாற்­றி­யி­ருக்­கிறார். இவர் கடந்த வருடம் ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஒரு வரு­ட­கா­ல­மாக பாரா­ளு­மன்­றுக்கு சென்­றி­ருந்தும் இவ்­வா­றி­ருப்­பது பல கேள்­வி­களை தோற்­று­விக்­கி­றது. மற்­றைய தேசிய பட்­டியல் உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி எம்.எஸ்.எம்.சல்­மானும் குறிப்­பிட்ட சில தலைப்­பு­களின் கீழ்தான் பாரா­ளு­மன்ற விவா­தங்­களில் மட்டுமே கலந்­து­கொண்­டி­ருக்­கிறார். 

எனவே தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி என்­பது முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள ஆளு­மை­மிக்­க­வர்­களால் நிரப்­பப்­பட வேண்டும். பிரதியமைச்சர் ஹரீஸ் விளையாட்டு துறையில் முன்னிலை பெறவில்லை. அத்துடன், பிரதியமைச்சர் அமீர் அலி அவரது அமைச்சுக்கு கீழான தலைப்பு எவற்றிலும் முன்னிலை பெறாமையையும் சுட்டிக்காட்டலாம்.முஸ்லிம் சிவில் அமைப்புகள் வெறு­மனே நாம் அர­சி­யல்­வா­தி­களின் பல­வீ­னங்­களை மட்டும் சுட்­டிக்­காட்­டிக்­கொண்­டி­ராது இனி­வரும் காலங்­களில் அவர்­க­ளுடன் இணைந்து சமூக கட்­ட­மைப்பில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. 

விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகிய இக்கட்டுரை, ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் இங்கு சுருக்கித் தரப்பட்டுள்ளது.

1 comment:

  1. MUSLIMS IN SRI LANKA, ESPECIALLY IN THE NORTH EAST TOO NEED A "NEW POLITICAL FORCE", A POLITICAL FORCE THAT WILL FIGHT AGAINST THE AMALGAMATION OF THE NORTH AND EAST AS MANUPILATED BY THE TNA, WIGNESWARAN AND NOW BY KARUNA AMMAN WITH HIS NEW POLITICAL TAMIL PARTY, “THE TAMIL UNITY FREEDOM PARTY” ANNOUNCED IN BATTICALOA YESTERDAY, INSHA ALLAH.
    WILL THAT MEAN THE MUSLIMS IN SRI LANKA WILL ALSO NEED A "NEW POLITICAL PARTY" INSHA ALLAH. HASSANALI, BAZEER SEGU DAWOOD, NAJEEB MAJEED, HISBULLAH, CADER MASTHAN, ATTAULLAH. Y.L.S.HAMEED AND ALL MUSLIM POLITICIANS AT GRASS-ROOT LEVEL SUPPORTING “KILAKKIN ELUCHI MOVEMENT” SHOULD GATHER TO FORM THIS “NEW MUSLIM POLITICAL FORCE”. TIME IN THE NEAR FUTURE WILL GIVE AN ANSWER TO THIS, INSHA ALLAH
    Noor Nizam, Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.