Header Ads



சிறிலங்காவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்ட் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மாளிகையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரெஞ்சு அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரத்தை அளித்தார்.

இதில் பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் திலக் ரணவிராஜாவும் பங்கேற்றிருந்தார். இதன்போது, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் சார்பில், பிரெஞ்சு அதிபருக்கு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கும், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கும் சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் போது, சிறிலங்காவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பிரெஞ்சு அதிபர், ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அனைத்துலக சமூகத்துடன் சிறிலங்கா மீண்டும் தொடர்புகளை வலுப்படுத்துவவதில் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.