வில்பத்து பிரச்சினை, கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது - ஜனாதிபதி
முன்னொருபோதும் இல்லாத வகையில் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
கடந்த காலங்களை விடவும் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாள் ஒன்றுக்கு மூன்று நான்கு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் வில்பத்து பிரச்சினைகள் கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவை. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த சிவில் அமைப்புச் செயற்பாட்டாளர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததுடன், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வெற்றியைப் போன்றே எதிர்காலத்தில் அனைவரும் இணைந்து நாட்டுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்க வேண்டுமென சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment