டிரம்ப் ஒரு, ஆபத்தான புதுவரவு - ஈரான் அதிபர்
அமெரிக்க அதிபரின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி, அரசியலுக்கு மோசமான புதுவரவாக டிரம்ப் இருக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு.
இந்நிலையில், டிரம்ப் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, “ட்ரம்ப் இவ்வளவு காலம் வேறு உலகில் வசித்துவிட்டு இப்போதுதான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஆனால், அவர் ஆபத்தான வரவாகத்தான் இருக்கிறார். டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவை மட்டும் தான் பாதிக்கும். மற்ற நாடுகள் நல்ல நிலையில் தான் இருக்கும்.
ஈரான் மக்களின் மத்தியில், அமெரிக்க அரசின் நிர்வாகம் டிரம்ப் நடவடிக்கைகளால் நேர்மையற்றதாக மாறிவிட்டது. அதனால் தான் அமெரிக்கர்களுக்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
ஹஹ் ஹா..
ReplyDeleteஒரு "அறிவிலி" ஜனாதிபதியால் உங்களுக்கு அமெரிக்காவுடன் இருந்த கள்ளத் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டதா???? பாதிக்கப்பட்டவர்களாக ஆஜரானவர்களில் அநேகர் உங்கள் நாட்டவர்கள்! கேட்டால் "அமேரிக்கா ஈரானின் எதிரி நாடாம்!!!" கவலை வேண்டாம். பயப்பட வேண்டாம். உங்கள் ஆசான்களான "யூதர்கள்" உங்களைக் காப்பாற்றி உங்கள் உறவை சீர் செய்வர்.
இந்தப் பூகோலத்தில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்ற ஓரே முஸ்லிம் நாடு ஈரான் மாத்திரமே.
Deleteஇந்தப் பூகோலத்தில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்ற ஓரே முஸ்லிம் நாடு ஈரான் மாத்திரமே.
ReplyDelete