இலங்கையர்கள் விசா இன்றி, அமெரிக்கா போகலாம் என்பது வதந்தி
விசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முடியும் என்ற செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
சில சமூக வலைத்தளங்களும் செய்தி நிறுவனங்களும் இலங்கைக்கான விசா நடைமுறையை தளர்த்தும் வகையிலான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் எனவும் சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சமாக 180 நாட்கள் வரை இலங்கையர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும் எனவும் 180 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு விசா பெற்றுக்கொள்வது கட்டாயம் எனவும் ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு தீர்மானத்துக்கும் அமெரிக்கா வரவில்லை எனவும் அவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை இராஜதந்திரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வர்த்தகம், மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், விசா இல்லாமல் இலங்கையர் கள் அமெரிக்கா செல்லலாம் என வெளி யான அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கையில் உள்ள அமெ ரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment