இலங்கையில் மிகமிக விசித்திரமான சம்பவம்
-Tm-
1998 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகி, 19 வயதைப் பூர்த்தியடைந்த போதிலும் அப்பெண்ணுக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவ்வாறான மிகமிக விசித்திரமான சம்பவமொன்று, மலையகத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பெண், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று தனது 20 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடவிருக்கின்றார்.
இந்நிலையிலேயே, அப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அப்பெண்ணின் பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
அந்த முயற்சியின் பயனாக, நேற்று (21) அலைபேசியில் தொடர்புகொண்ட, அப்பெண்ணின் பெற்றோர், சில விவரங்களை தெரிவித்து அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தை, காரியாலயத்துக்கு தொலை நகலில் அனுப்பிவைத்தனர்.
அதில், ‘பெயர்’ எழுத வேண்டிய இடத்தில், ‘நமத் தீ நெத்த’ என்று சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.
அதாவது, பெயர் வைக்கப்படவில்லை என்றே எழுதப்பட்டுள்ளது.
எனினும், அந்தப் பெண், பாடசாலைக்குச் சென்றாரா, இல்லையா, அப்படி சென்றிருந்தால் என்ன பெயர் கொண்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பிலான விவரங்களை தெரிந்துகொள்வதற்கு முன்னர், அந்த அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
மீளவும் அழைப்பை ஏற்படுத்துவதற்கு பல முறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.
Post a Comment