Header Ads



கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு, புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை?

கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையினைச் சேர்ந்த ஒருவரை புதிய அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நடவடிக்கையில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை ஈடுபட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் நிரந்தர அதிபராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள பி.எம்.எம்.எம்.பதுர்தீனை உடனுக்கு அமுல் வரும் வகையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இடமாற்றியுள்ளது. 

இந்த திடீர் இடமாற்றத்தினை அடுத்து, பாடசாலைக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையினைச் சேர்ந்த ஒருவரை புதிய அதிபரொருவரை நிரந்தரமாக நியமிக்க கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை தரத்தினைக் கொண்ட சில கல்வி அதிகாரிகளுடன் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  

1 comment:

  1. பதூர்தீன் நிரந்தர அதிபர் இல்லையெ

    ReplyDelete

Powered by Blogger.