மீண்டும் வருகிறது ‘செங்கல் போன்’
உலகில் அதிகம் விற்பனையான நோக்கியா 3310 கையடக்கத் தொலைபேசியை நோக்கியா நிறுவனம் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனம் 3310 கையடக்க தொலைபேசியை வெளியிட்டதை அடுத்தே அது முன்னணி கையடக்க தொலைபேசி உற்பத்தி நிறுவனமாக முன்னேறியது.
நோக்கியா 3310 நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி கொண்டது. பயன்படுத்த எளிதானது. கிட்டத்தட்ட அழிக்கவே முடியாதது என்று பெயர்பெற்றதாகும். இதனால் ‘செங்கல் போன்’ என்று இது அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த தொலை பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 26ஆம் திகதி அதற்கான அறிமுக விழா பார்சிலோனாவில் நடைபெறவுள்ளதாக நோக்கியா கையடக்க தொலைபேசியின் பிரத்தியேக உரிமைகளைப் பெற்றுள்ள எச்.எம்.டி கிளோபல் ஓய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த கையடக்க தொலைபேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிய ரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய நோக்கியா நிறுவனம், தமது பழைய வடிவங்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
Post a Comment