இன்றுமுதல் அமுலுக்கு வரும், தகவல் அறியும் சட்டமூலம் (முழு விபரம் இணைப்பு)
-Metro-
தகவல்களை அறிந்து கொள்ளும் பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் சட்டம் இன்றுமுதல் -03-02-2017அமுலுக்கு வருகிறது. இது தொடர்பான விளக்கங்களை தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவைகள் வருமாறு:
தகவல் என்றால் என்ன?
எவரேனும் அரசாங்க அதிகார சபைகளிடம் உள்ள பதிவுகள், ஆவணங்கள், நினைவூட்டல்கள், மின்னஞ்சல்கள், அபிப் பிராயங்கள், ஆலோசனைகள், செய்திப்பிரசுரங்கள், சுற்றறிக்கைகள், கட்டளைகள், ஒப்பந்தங்கள், அறிக்கை கள், பத்திரங்கள், மாதிரிகள், கடிதத் தொடர்பாடல்கள் போன்ற வடிவிலான ஏதேனும் சாதனங்களாகும். தம்மிடம் உள்ள பகிரங்க தகவல்களை முன்னு மதியுடன் கிடைக்கச் செய்தல் அரசாங்க அதிகாரியின் கடமை ஆகும். அத்துடன், தகவல்களை கோருதல் பொதுமக்களின் உரிமை ஆகும்.
அரசாங்க அதிகார சபை என்றால் என்ன?
அரசியலமைப்பின் அல்லது ஏதேனும் வேறு எழுத்திலான சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அல்லது தாப்பிக்கப்பட்ட ஏதேனும் அதிகாரசபை,அமைச்சு, திணைக்களம், பகிரங்க கூட்டுத்தாபனம், உள்ளூராட்சி மற்றும் மாகண அதிகார சபைகள், அவ்வாறே சட்டத்தில் வரையறுக்கப்பட்ட கம்பனிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் எல்லா நீதிமன்றங்களும் நியாய சபைகளும்.
தகவல் அலுவலர் என்பவர் யார்?
தகவலுக்கான உரிமைக் கோரிக்கையை பின்பற்றி தகவல்களை வழங்குவதற்கு பகிரங்க அதிகாரசபையினால் நியமிக்கப்படும் ஓர் அலுவலர்.
செலுத்த வேண்டிய கட்டணங்கள்
தகவல் கோரிக்கைகளுக்கான கட்டணங்கள் ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட கட்டண அடிப்படையில் செலுத்தப்படுதல் வேண்டும். இவை
எவ்வாறு விண்ணப்பிப்பது?
பொதுவாக, இந்த சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்க்கு தேவைப்படுத்தப்படும் தகவல் உரிமைக்கான ஒழுங்கு விதிகளில் விதந்துரைக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
மேன்முறையீட்டுக்கான உரிமை
தகவல்களுக்கான கோரிக்கை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் முதலில் குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடமும். இரண்டா வதாக உரிமைக்கான ஆணைக் குழுவுக் கும், மூன்றாவதாக மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கும் மேற்கொள்ளப்படு தல் வேண்டும்.
தகவல் அறியும் உரிமைக்களுக்கான ஆணைக்குழு
2–203–204, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம்,
கொழும்பு - 07
தொலைபேசி: 011-2691625,
மின்னஞ்சல் rti.commission16@gmail.com.
Post a Comment