வீதி விபத்துக்கள், ஒரு பார்வை
-நாகூர் ழரீஃப்-
வீதி விபத்துகக்களின் கோர விளைவுகள் பற்றிய செய்திகள் எமக்குக் கிடைக்காத நாட்களே இல்லை எனுமளவு அது ஒரு தொடர் கதையாக அமைந்து விட்டது.
வருடாந்தம் வீதி விபத்துக்களினால் 1.25 மில்லியன் மக்கள் இறப்பதாகவும், 20 மில்லியன் முதல் 50 மில்லியன் மக்கள் வரை காயப்படுவதாகவும் சர்வதேச புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இந்த விபரங்களின் அடிப்படையில் நோக்கும் போது, உள்நாட்டு யுத்தற்கள், இயற்கை அனர்த்தங்கள், பாரிய நோய்கள் போன்ற மனித உயிர் கொள்ளிகளின் வரிசையில் வீதிவிபத்துக்களும் அடங்குகின்றது எனலாம்.
இவ்விபத்துக்களானது, உள்நாட்டு வருமானங்களில் 3மூ வீதம் முதல் 5மூ வீதம் வரையில் இழக்க நேரிடுகின்றது என்று 2010 ஆம் ஆண்ணடளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீடு தெரிவிக்கின்றது.
உலக சுகாதாரத் திணைக்களத்தின் பல ஆண்டுகளின் திட்டங்களை இவ்வீதி விபத்துக்கள் பால்படுத்தி விடுவதாக கவலை தெரிவித்துள்ளது அத்திணைக்களம்.
சாலைகளின் மரபு வழி பேணாமை, அதிவேகம், குடிபோதை, தூக்கம், அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகளிடையே ஏற்படும் போட்டிகள், பாதசாரிகளின் கவணக்குறைவு, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகள் ஆகியன விபத்துக்களுக்கான அடிப்படைக் காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளன.
இலங்கையில 2015ல் மாத்திரம்; 2700 விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த பத்து வருடங்களில் 23000 பேர் இறந்துள்ளதாகவும், 50000 மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் வீதி போக்கு வரத்து சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'வீதி விபத்துக்களானது, தேசிய சுகாதாரத்தை பின்தள்ளி விடும் ஒரு நாசகாரணியாகும்' என்று பொலிஸ் போக்கு வரத்துத் தலைமையகத்தின் உப பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.
போக்குவரத்துப் அதிகார சபையின் சாலை விதிகளைப் பேணுவதையும் கட்டுப்படுவதையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. வேகக்கட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் பயனளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள ஓர் அம்சமாகும்.
அருட்களாக கிடைக்கப்பெற்றுள்ள போக்குவரத்துச் சாதனங்களை சரியான முறையில் பயன்படுத்தாத விடத்து, அவை மருட்களாக மாறி விடுகின்றன. விமாணிகள், மாலுமிகள் முதல் சைக்கிள் ஓட்டுனர்கள் வரை அவர்களது பொறுப்புக்களையும் கடமைகளையும் சிந்தையில் சுமந்தவர்களாக பயணிப்பது, தம்மையும் தம்மை நம்பிப் பயணிப்பவர்களையும் அமானிதமாக கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு வழிவகுக்கும்.
மனமுரண்டாக வாகணங்களைச் செலுத்தி விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் பயணிகளோ ஓட்டுனரோ மரணிப்பாராயின் அது கொலையாகவோ, தற்கொலையாகவோ அமைந்து விடலாம். தம்மை நம்பி விசுவாசித்து ஒப்படைக்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான வாகணங்களையும் விலை மதிக்க முடியாத உயிர்களையும் வீணாக்கிய அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றவாளிகளாக ஓட்டுனர்கள் அல்லாஹ்விடத்தில் மறுமையில் நிறுத்தப்படலாம்.
இன்று மக்கள் தொகையை மிஞ்சும் வாகணங்களின் அதிகரித்துள்ள வேளையில் மிகவும் நிதானித்தவர்களாக ஓட்டுனர்கள் செயற்பட வேண்டும். அதனால் மேற்படி விபத்துக்களைக் குறைக்கலாம்.
Post a Comment