எம்மை வீழ்த்த சதி, பாதுகாத்துக்கொள்ளவே கட்சிக்குள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம் - ஹக்கீம்
ஆட்சி அதிகாரங்களை கூடுதலாக பகிரவேண்டும். அந்த பொறுப்பை கட்டாயம் செய்வோம் என வாக்குறுதி வழங்கி அதிகாரத்திற்கு வந்தவர்கள் அந்த வாக்குறுதிகளில் இருந்து தடம் புரளப் போகின்றனரா என சந்தேகம் எழுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் இந்த அரசாங்கத்தை அமைக்கவில்லை. இந்த அரசாங்கத்தை அமைத்ததில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எப்படி பங்குள்ளதோ அதைவிடவும் மிகைத்த பங்கு மக்கள் விடுதலை முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின்மூலம் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மேம்படுத்த அதற்கான திருத்தங்களை செய்யவேண்டும் என்று வாக்குறுதி வழங்கிய தலைவர்கள் இன்று தமது கட்சிக்குள் எழும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாது தங்களின் வாக்குறுதிகளில் இருந்து நழுவிப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய பேராளர் மாநாடு மிகவும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் இப்போது நாம் பலமான நிலைமையில் உள்ளோம். இந்த ஆட்சியின் பங்காளர்களாக நாம் உள்ளோம். இது சாதாரண விடயம் அல்ல. மத்தியிலே அரசாங்கத்தில் பலமான நிலையிலும் மாகாண ஆட்சியில் கிழக்கில் அத்தனை சுக்கான்களும் எமது கைகளில் உள்ளன. இந்த தருணத்தில் எமது கட்சியை பலவீனப்படுத்த ஒரு கூட்டம் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் எமது அணிக்குள்ளேயே இருக்கின்றனர். எமது இயக்கத்தினுள் இருந்து எம்மை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாம் ஊழல் அரசியல் செய்யவில்லை. இந்த மோசமான அரசியலுக்கு அப்பால் நாம் மிகுந்த அடக்கத்தோடும் திறந்த மனதோடும் எமது
உள்விவகாரங்களை ஒளிவு மறைவு இல்லாது பேசும் தன்மையில் செயற்படுகின்றோம். சவால்களை கூட்டாக தீர்க்கும் முயற்சியில் இறங்கும் தயார் நிலைக்கு கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற அறைகூவலை எமது கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் விடுத்தேன். இந்த இயக்கம் திறந்த மனதுடன் நேற்றைய கூட்டத்தில் பேசியது. இன்றும் பேசவேண்டிய தேவையும் உள்ளது. எமது இயக்கத்தை வளர்த்த பலர் எம்முடன் உள்ளனர். இந்த இயக்கம் வாழவேண்டும் என்பதில் எமது மக்கள் உள்ளனர். அதற்காகவே நாம் சில முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளோம். எமது கட்சியில் சில முக்கிய பதவி மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் கான் இந்த தீர்மானங்களை எடுத்தோம். எமது பக்க நியாயங்களை நான் நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்தேன்.
மேலும் இன்று எமக்கு மாத்திரம் அல்ல நாட்டில் சகல கட்சிகளையும் சவால்கள் சூழ்ந்துள்ள ஒரு காலகட்டத்தில் உள்ளோம். கட்சிகளுக்கு உள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்சிகள் நடந்த வண்ணமே உள்ளது. எமது கட்சிக்குள் மாத்திரம் பிரச்சினைகள் உள்ளதாக கூறவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எமது கட்சிக்குள் பூதாகரமான பிரச்சினைகள் இருப்பதாக கூறி அவர்கள் வெட்டிய குழிகளில் அவர்களே விழுந்துள்ளனர். கட்சியில் இருந்து யாரையும் துரத்த வேண்டும்,
நீக்கவேண்டும் , ஒதுக்கிவைக்க வேண்டும் என நினைத்ததில்லை. ஆனால் கட்சியின் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள தலைமையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இன்று இருக்கும் நிலையில் அரசியல் குழப்பங்கள் ஏராளமாக உள்ளன. இன்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் பற்றி நாம் பேசுகின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் இந்த அரசாங்கத்தை அமைக்கவில்லை. இந்த அரசாங்கத்தை அமைத்ததில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எப்படி பங்குள்ளதோ அதைவிடவும் மிகைத்த பங்கு மக்கள் விடுதலை முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் உள்ளது. கடந்த ஆட்சியின் அட்டூழியங்கள், மோசடிகளை தடுக்க அனைவரும் வந்தததன் பின்னணயில் தான் இந்த அரசாங்கம் ஆட்சியை அமைத்தது என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும்.
ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாகும். அல்லது அப்போதைய அரசாங்கமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போடடியிடுவதாகும். அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கேட்பதாகும். ஆனால் தனித்துக் கேட்பது என்பது மாற்றுவழி அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு ஆபத்துக்களை சந்திக்க நாம் தயாராக இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கேட்பது ஆட்சியை கைப்பற்றும் பாதை அல்ல. நாம் அப்போதும் தனித்து தீர்மானம் எடுத்து எமது இருப்பை நாம் பலப்படுத்தினோம். எம்மை வீழ்த்த இப்போதும் சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்காவே கட்சிக்குள் நாம் அவசர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.
unkada katha inni mudinchi.............
ReplyDeleteAny substanc? Harping on the same spring ? Bundle of straw .
ReplyDeleteSick to totten core .
These charlatans surviving n flourishing on Ashraff's legacy n label .Poor our community has beeb taken for a ride . Tragedy n Farcical .
ReplyDeleteMUSLIMS IN SRI LANKA, ESPECIALLY IN THE NORTH EAST TOO NEED A "NEW POLITICAL FORCE", A POLITICAL FORCE THAT WILL FIGHT AGAINST THE AMALGAMATION OF THE NORTH AND EAST AS MANUPILATED BY THE TNA, WIGNESWARAN AND NOW BY KARUNA AMMAN WITH HIS NEW POLITICAL TAMIL PARTY, “THE TAMIL UNITY FREEDOM PARTY” ANNOUNCED IN BATTICALOA YESTERDAY, INSHA ALLAH.
ReplyDeleteWILL THAT MEAN THE MUSLIMS IN SRI LANKA WILL ALSO NEED A "NEW POLITICAL PARTY" INSHA ALLAH. HASSANALI, BAZEER SEGU DAWOOD, NAJEEB MAJEED, HISBULLAH, CADER MASTHAN, ATTAULLAH. Y.L.S.HAMEED AND ALL MUSLIM POLITICIANS AT GRASS-ROOT LEVEL SUPPORTING “KILAKKIN ELUCHI MOVEMENT” SHOULD GATHER TO FORM THIS “NEW MUSLIM POLITICAL FORCE”. TIME IN THE NEAR FUTURE WILL GIVE AN ANSWER TO THIS, INSHA ALLAH
Noor Nizam, Convener - "The Muslim Voice".