Header Ads



தாஜுதீன் கொலை, குற்றவாளி கண்டுபிடிப்பு - சந்திரிக்கா


நாமல் ராஜபக்சவிற்கு 1000 மில்லியன் டொலர் டுபாய் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் உறுதியாக கூறுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

திருட்டை முற்றாக தடுக்க வேண்டும். இப்போது எமது பக்கத்திலும் ஒரு சிலர் திருட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால் கடந்த ஆட்சியில் போன்று கணக்கற்ற கோடிகள் கொள்ளையிடப்படவில்லை, திருட்டு இடம்பெற வில்லை.

கடந்த ஆட்சியில் ஜானாதிபதி மகிந்த நிதியமைச்சர் பசில், கோத்தபாய, அனைத்திற்கும் மூக்கை நுழைக்கும் நாமல் போன்ற அனைவரும் இணைந்தே திருட்டில் ஈடுபட்டனர்.

தாஜுதீன் கொலை வழக்கில் 31 இலட்சம் தொலைபேசி அழைப்புகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 36 அழைப்புகள் தாஜுதீன் கொல்லப்படுவதற்கு முன்னைய தினம் அரசியல் பிரதானி ஒருவரின் தொலைபேசியில் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். 

அதே போன்று நாமல் ராஜபக்சவின் டுபாய் வங்கி ஒன்றில் 1000 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளது. இதனை நான் உறுதியான சொல்கின்றேன் இதற்காக என் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது இது நூறு வீதம் உண்மை.

அதே போன்று நுரைச்சோலையில் மட்டும் மகிந்த ஊழல் செய்து கொள்ளையிட்டது 15 பில்லியன் ரூபாய்களாகும்.

மேலும் இலங்கை சுதந்திரக் கட்சியை பிளவு படுத்த மகிந்த 3 தடவைகள் முயற்சி செய்துள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

2 comments:

  1. Wow very good statment.Mr group already scatted.

    ReplyDelete
  2. வீண் பேச்சு வேண்டாம். எங்களுக்கு தேவை உறுதியான நடவடிக்கை. நீங்கள் நாட்டை நிர்வகித்த விதமும் யுத்தம் நடத்திய முறையும் தெளிவாக தெரிகின்றது. நல்ல வேளை மகிந்த யுத்தத்தை முடித்தார். சொன்னதை செய்த ஒரே தலைவர்.

    ReplyDelete

Powered by Blogger.