'ஜனாதிபதி சுகாதாரத்துறையை ஏற்றுக்கொள்ளத் தவறினால், ஆபத்தான நிலைமை ஏற்படக்கூடும்'
சுகாதார அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமேன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரைகளை சுகாதார அமைச்சர் வேண்டுமென்றே உதாசீனம் செய்து வந்தால், ஜனாதிபதி சுகாதார அமைச்சின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலவச சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகள் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. ஜனாதிபதி சுகாதாரத்துறையை ஏற்றுக்கொள்ளத் தவறினால் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும்.
மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். இலங்கையின் சுகாதாரத்துறை தொடர்பில் சுயாதீனமாக வழிகாட்டல்களை செய்யும் ஒரே நிறுவனம் மருத்துவ சபையாகும்.
இந்த நிறுவனத்தின் ஆலோசனைளை வழிகாட்டல்களை எவரும் உதாசீனம் செய்ய முடியாது. அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment