Header Ads



கிழக்கு மாகாண, அதிகாரத்தை குறிவைக்கும் றிசாத்

முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பாதுகாப்பு கவசமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் கிழக்கு மாகாண ஆட்சி நமது கைகளுக்குள் வருவதற்கு சமூக ஒற்றுமையே அத்தியாவசியமானது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

மூதூரில் பல்நோக்கு கூட்டுறவு கிளையை திறந்து வைத்தபின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நமது நாட்டிலே வடக்கு கிழக்குக்கு வெளியேதான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றபோதும் அவர்கள் பல்வேறு பிரதேசங்களில் சிதறியும் பரம்பலாகவும் வாழ்வதனால் அரசியலிலே எதுவித தாக்கமும் செலுத்தமுடியாதவர்களாக இருக்கின்றனர்.

கிழக்குமாகாணதில் மாத்திரமே முஸ்லிம்கள் செறிவாகவும் நிலத்தொடர்புடைய அமைவிடத்திலும் வாழ்ந்துவருவதால் அவர்கள் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றன.

கிழக்கு மாகாண ஆட்சி முஸ்லிம்களின் கைவசம் வந்தால் நாட்டில் உள்ள ஏனைய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார பாதுகாப்பு விடயங்களை கவனிப்பதற்கு அது வழிகோலும்.

வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் கண்டியிலும் முஸ்லிம்களின் நலன்களை கவனிக்க அந்தந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசபை உறுப்பினர்கள் எனப்பலர் இருக்கின்றனர்.

ஆனால் அனேகமான கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் பிரத்தியேகத் தேவைகளைக் கவனிக்க பிரதேசபை உறுப்பினர் ஒருவரேனும் இல்லாத துர்ப்பாக்கிய நிலையை நாம் காண்கின்றோம்.

தமது ஒரு சிறிய பிரச்சினையைத் தீர்ப்பதற்குகூட பிறரின் உதவியை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

எனவேதான் கிழக்குமாகாண அதிகாரத்தை நம் வசப்படுத்துவதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் தேவைகளை நிவர்த்திப்பதற்கான மையமாக அதனை மாற்றியமைக்க முடியும் என நம்புகின்றோம்.

முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் சமூகநலன் சார்ந்த இயக்கங்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் தமக்கிடையேயான கருத்து பேதங்களை களைந்து, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஓரணியில் போட்டியிடுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

மூதூரிலே குன்றும் குழியுமாக கிடக்கின்ற வீதிகள் கட்சியை மார்க்கமெனக்கருதி காலம் காலமாக வாக்குகளை வாரி வழங்கிவரும் நமது மக்களுக்கு நல்லதோர் படிப்பினையாக இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

7 comments:

  1. தற்போது கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கும் நிலைகளையும் இல்லாமல் செய்யும் முயற்சி

    ReplyDelete
    Replies
    1. please do not think wrong way . his vision is correct and long future of nation..

      Delete
    2. சகோ,,, இந்த திகதியையும் விடயத்தையும் எழுதி வௌத்துக்கொள்ளுங்கள்,நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை.ஆனால் வெற்றிபெற முடியாவிட்டாலும் மற்றவன் தோல்வியடைய வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாக வருகின்றன.

      Delete
  2. Kilakkula muslinkala vida tamilan 40000 pear athikam

    ReplyDelete
  3. do not waste your time...jst do your business in Vanni only...Mr.

    ReplyDelete
  4. Congratulation Rishard. Please work with Hisbullah and Athaualla. Do your best to eliminate Rauf from his political life.

    ReplyDelete
  5. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
    (அல்குர்ஆன் : 3:26)

    ReplyDelete

Powered by Blogger.