யுவதிகளை கடத்தி மசாஜ் நிலையங்களில், வேலைக்கு அமர்த்தும் கும்பல் - பிரபல தொழிலதிபர் கைது
யுவதிகளை கடத்தி பலாத்காரமாக கொழும்பில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் (மசாஜ் நிலையங்கள்) வேலைக்கமர்த்தும் கும்பல் ஒன்றை மொனரா கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொனராகலை படல் கும்புர பகுதியில் வைத்து யுவதி ஒருவரை கடத்த முற்பட்ட போது இந்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அந்த கும்பலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட பிரபல தொழிலதிபர் ஒரு வரையும் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் குறித்த யுவதி வீதியில் செல்லும் போது மொனராகலையின் பல இடங்களில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் குறித்த தொழிலதிபரின் குண்டர் குழு அந்த யுவதியை கடத்த முற்பட்டுள்ளது.
இது குறித்து கிடைத்த தகவலையடுத்து அந்த குழுவின் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளுக்கு அமைவாக தொழிலதிபரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே இக்கடத்தல் தொடர்பில் மொனராகலைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர பிரேமசாந்தவின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறு கடத்தப்படும் யுவதிகள் கொழும்பில் உள்ள குறித்த தொழிலதிபருக்கு சொந்தமான 5 உடற்பிடிப்பு நிலையங்களில் பலாத்காரமாக சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
நேற்று முன்தினம் கடத்த படவிருந்த யுவதியும் ஏற்கனவே குறித்த தொழிலதிபரின் கொழும்பு உடற்பிடிப்பு நிலையத்தில் சிறிது காலம் சேவையாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ரவர் எனவும் இந்நிலையிலேயே அவரைக் கடத்த முயன்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
கைதாகியுள்ள நால்வரையும் மொனராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(எம்.எப்.எம்.பஸீர்)
முடிவு வரை போலீசாருக்கு சுதீனம் கொடுக்கப்படுமானால் சரி. இலங்கைப் போலீசார் திறமையானவர்களே! இடை நடுவே வரும் அரசியல் குறுக்கீடுகள் தான் போலீசாரை "கோமாளிகளாக்கின்றன". இலங்கைப் போலீசாருக்கு உள்ள சாபக்கேடு இதுதான். இதனால்த் தான் அவர்களால் பிழை விடும் போலீசாரை ஓரங் கட்ட முடிவதில்லை. அவனும் ஒரு அரசியல் பின்புலத்திலேயே இருப்பான்.
ReplyDeleteIf this is true then what happened to the complained made by previously kidnapped family members ?
ReplyDelete2. The victims when the clients come to massage centre they could have told the clients about their situation why didn't they tell ?