நீதிமன்ற வழிமுறையின்படியே, இவ்வருட ஹஜ்
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் கடந்த வருடம் அமுல்படுத்தப்பட்ட உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளின் படியே (Guide Lines) மேற்கொள்ளப்படுமென அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாத் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது, பிரதேச செயலாளர் காரியாலயங்களில் கடமைபுரியும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்களினால் கடந்த வருடம் ஹஜ் கடமை நிறைவேற்றிய ஹஜ்ஜாஜிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ்ஜாஜிகளில் 90 வீதமானோர் புதிய ஹஜ் வழிமுறையே சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஹஜ் புதிய வழிமுறைகளில் குறைபாடுகள் எதுவுமின்றி ஹஜ்ஜாஜிகள் மற்றும் முகவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
மேலதிக ஹஜ்கோட்டா பெற்றுக் கொள்வதற்காக சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.
ARA.Fareel
Alhamdulillah! After many long years, Minister Haleem is leading Haj Affairs in an exemplary and honorable manner, may Allah guide and bless him.
ReplyDeleteAlhamdulillah! After many long years, Minister Haleem is leading Haj Affairs in an exemplary and honorable manner, may Allah guide and bless him.
ReplyDelete