இலங்கையில் பணியாற்ற ஆறரை இலட்சம் டொலர் தேவை – அல் ஹுசேன்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்திறனை வலுப்படுத்துவதற்கு இந்த ஆண்டில் மேலதிக நிதி தேவைப்படுவதாகவும் இதற்கு நாடுகளும், தனியார் கொடையாளர்களும் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு ஐ.நாவின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 107.56 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம்.
எனினும், மனித உரிமைகள் பாதுகாப்பு சார்ந்த செயற்பாடுகள், சிறப்பு அறிக்கையாளர்களின் பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக 252.9மில்லியன் டொலர் மேலதிகமாகத் தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் சிறிலங்காவில் இந்த ஆண்டில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment