சமூகத்தை வழிகெடுக்க, ஒரு திட்டம்
இந்த உலகில் பல மதங்கள் தோன்றியது. ஆனால் அதன் பொய் நிலையைப் பார்த்து மக்கள் அதை விட்டு விலகி அந்த மதம் அழிந்து விட்டதை நாம் பார்த்து இருக்கிறோம். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கம் இன்றும் தனிச் சிறப்பும் புகழும் உடைய மார்க்கம். இன்றும் மக்கள் அணி அணியாக இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். காரணம், இஸ்லாத்தில் மட்டும்தான் அவர்களுக்கு சம உரிமையும், சகோதரத்துவமும் உண்டு என்று அவர்கள் விளங்கிக் கொண்டனர்.
இப்படிப்பட்ட காலத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் உண்மையையும் பார்த்து அதனை அழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட யூதர்களும் கிறிஸ்தவர்களும் பல முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்கள் தொல்வியைத்தான் தழுவினார்கள். காரணம், அது அல்லாஹ்வின் மார்க்கம். ஆகையால் அவர்கள் முஸ்லிம்களை வழி கெடுக்க முடிவு எடுத்தனர். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தொடர்பில் இருக்கும்பொது அவர்கள் முயற்சி பலன் அளிக்காது. ஆதலால் அவர்கள் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு விலக வைக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அதில் (மீடியாவின் வாயிலாக) கையாளுகின்ற முக்கியமான மூன்று விஷயங்களை நாம் இங்கு பார்ப்போம். அவை: கார்ட்டூன், ஆபாசப் படம், நாடகம் (சீரியல்)
கார்ட்டூன்
இன்று நம்முடைய சிறு குழந்தைகள் படிக்கும் வயதில் தொலைக்காட்சியில் கார்ட்டூனைப் பார்க்கின்றனர். இது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் அவர்கள் சரியான அறிவைப் பெறாமலேயே வளர்கின்றனர். நாளடைவில் கார்ட்டூனுக்கு அடிமையாகும் குழந்தைகள் அறிவையும், மூளையின் சிந்திக்கும் ஆற்றலையும் இழக்கின்றனர். கார்ட்டூனைப் பார்க்கும் இஸ்லாமிய குழந்தை மார்க்கத்திற்கு முரணான செயல்களைச் செய்கின்றது. உதாரணம், baal ganesh, chotta beem, lord krishna, hanuman பொன்ற கார்ட்டூன் தொடர்களைப் பார்க்கும் குழந்தைகள் அவை உண்மை என்று நம்புகின்றன. இதனால் அவர்கள் வளர்ந்தாலும் சிறு குழந்தைகள் பொன்று நடந்து கொள்வார்கள். இவர்களுடைய மார்க்க அறிவும்,தொடர்பும் அழிக்கபடுகின்றன.
ஆபாசப் படம்
இன்று இந்தியாவில் அனைத்து சமூக மக்களும் நவீன கலாச்சாரத்தால் சீரழிந்து கொண்டு இருக்கிறனர். இதற்கு நம்முடைய இஸ்லாமிய மக்களும் விதிவிலக்கு அல்ல. பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்காமல் உலகக் கல்வியைக் கற்கவே அதிகம் கவனம் செலுத்துகிறோம். படிக்கும் வயதில் அவர்களுக்கு கைபேசி வாங்கிக் கொடுக்கிறோம். அதனை அவர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்துகிறார்களா என்று நாம் கவனிக்க தவறுகிறோம். பிள்ளைகள் பொது விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கவும், கல்வியில் அக்கறை காட்டாமல் இருக்கவும் யூதர்கள், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் இணையதளத்தில் ஆபாசப் படங்களை அதிகம் பரப்பி உள்ளனர். சில கைபேசி ரிப்பேர் கடையில் நம்முடைய இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய கைபேசிகளைப் பழுது பார்க்கக் கொடுக்கிறார்கள். அதில் அந்த நபர்கள் ஆபாசப் படத்தைப் பதிவு செய்து அவர்களை அதைப் பார்க்கச் செய்கிறார்கள். பிறகு அவர்களை விபச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஃபாசிஸ சிந்தனை உடையவர்கள் நம்முடைய தமிழ்நாட்டிலும் பலர் உள்ளனர். ஒரு கருத்துக் கணிப்புப் படி, 2 மணி நேரம் ஆபாசப் படம் பார்த்தவன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனது எண்ணம் வக்கிரமாக தான் இருக்கும்.
நாடகம்
நம் வீட்டுப் பெண்கள் இன்று காலை முதல் இரவு வரை தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து அனைத்து நாடகத் தொடர்களையும் பார்க்கின்றனர். இதனால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளையும், கணவரையும் கூட கவனிக்காமல் இருக்கின்றனர். தாய்தான் பிள்ளைகளுக்கு முதல் ஆசிரியர். ஆனால் நம் வீட்டுப் பெண்கள் பிள்ளைகளை வழி நடத்தாமல் அவர்களை வழி கெடுக்கின்றனர். நாடகங்களில் வரும் மாமியார்-மருமகள் சண்டை, கணவனை மதிக்காமல் இருப்பது, கள்ளக் காதல் போன்ற செயல்கள் சாதாரணமாகக் காட்டப்படுகின்றன. இதனால் அதிகமாக தலாக் (மணவிலக்கு) ஏற்படுகிறது. ஓர் உதாரணம் – சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட நாடகத்தில் கணவனைக் கொல்ல ஒரு கொலைகாரனுக்கு தன்னுடைய கற்பை இழக்க துணிந்து விட்டாள் ஒருத்தி. இதைப் பார்க்கும் நமது பெணகள் நிலை?
வீட்டு வேலைகள் செய்த பின் ஓய்வு நேரத்தை குர்ஆன் ஓத பயன்படுத்தாமல் வீணான காரியத்தில் ஈடுப்படுகின்றனர் பெண்கள். இவர்கள் சரியாக பிள்ளைகளை கவனிக்காமல் இருப்பதால் பெண் பிள்ளைகள் தவறான வழியில் செல்கின்றனர். நாம் இவர்களை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால் நாளை அவர்கள் மறுமையில் நமக்கு எதிராக சாட்சி சொல்வார்கள். இப்படிப்பட்ட சதிகள் நமக்கு எதிராக செய்யப்படுகிறது. இதில் கவலை என்ன என்றால் இதைப் பற்றித் தெரியாத ஒரு சமூகம் ஒரு பக்கம், இதைத் தெரிந்தும் மற்றவருக்கு தெரிவிக்காத சமூகம் ஒரு பக்கம். ஆகையால் முஸ்லிம் சமூகமே விழிப்புணர்வாக இரு. இஸ்லாத்திற்கு எந்த ஓர் இழப்பும் இல்லை.
ஆக்கம் : யூசுஃப்தீன்
jaffnamuslim கூட இருந்திருந்து சில செய்திகளில், அறைகுறை ஆடைகளுடனான பெண்களின் புகைப்படங்களை பிரசுரிப்பதைக் காண முடியும். அவை தவிர்க்கப் படுவது நல்லது.
ReplyDelete