Header Ads



சுபீட்சத்துக்காக சேவையாற்றியுள்ள முஸ்லிம்கள், சலசலப்புகளுக்கு ஆடிப் போகக்கூடாது - அமில தேரர்


-Vtm Imrath-

நமது நாட்டின் வரலாற்றைப் பார்க்கின்றபோது எல்லா இனத்தவர்களும் பெரும்பங்காற்றியுள்ளார்கள், நாம் யாரும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக முஸ்லிம் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து நாட்டின் சுபீட்சத்துக்காக சேவையாற்றியுள்ளார்கள். சின்னச்சின்ன சலசலப்புகளுக்கு எல்லாம் நாம் ஆடிப்போகாமல் தொடர்ந்தும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் நிம்மதிக்கும் கடந்தகாலம்போல் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என சிரேஷ்ட மதகுருவும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இரத்ததான முகாமினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் இரத்த தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக ஜபுர பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பெருமளவிலான ஆண், பெண் மாணவர்கள் முன்வந்து இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜபுர முஸ்லிம் மஜ்லிஸ் குழுவினால் முன்னனெடுக்கப்பட்ட இந்நிகழ்வை மஜ்லிஸின் சிரேஷ்ட பொருளாளரும் விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ஆர்.அஜ்வத் அவர்கள் நெறிப்படுத்த, "கூல் ப்ளானட்" ஆடையகம் அனுசரணை வழங்கியிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments

Powered by Blogger.