ஜேர்மனியின் Bavarian யாவில், பர்தா அணிந்து முகத்தைமூட அணிய தடை
ஜேர்மனியின் Bavarian மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுவதும் மூட குறிப்பிட்ட இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Bavarian மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள், மழலையர் பள்ளி நிலையங்கள், பொது பாதுகாப்பு சம்மந்தமான இடங்கள், வாக்கு செலுத்தும் இடங்கள் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை பர்தாவால் மூட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து Bavarian உள்துறை அமைச்சர் Joachim Herrmann கூறுகையில், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மூடுவது உள்ளூர் கலாச்சாரத்தை மீறுவதாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சமூதாயத்தின் அடிப்படையும் அடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஜேர்மனியிலேயே மிகவும் பழமைவாதத்தை கடைப்பிடிக்கும் மாநிலமாக பார்க்கப்படும் Bavarian மாநிலத்தில் கடந்த 2016 ஜூலையில் நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பர்த்தாவுக்கு மாநிலம் முழுவதும் அப்போதே தடை என முன்மொழியப்பட்டது.
இதற்கு ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் அப்போது ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சயமாக முகத்தை மூடுமாறு இறைவன் கட்டளை இட்டிருக்க மாட்டான் முகம் மூடுவதனல் ஏற்படும் நன்மையிலும் திமைபயெ அதிகம் முகத்தை ஒரு மனிதன் தவறுசெய்வதை பல விடயங்கள் தடுக்கும் இறை அச்சம் சமுக நிலை பொன்ற பல் இஸ்லாம் ஒரு சட்ட்த்தை கூறினால் அது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் உலகிலுள்ள அனைத்துப் பென்காளும் முகத்தை மூடினால் அடையாளம் கான்பதில் சிக்கல் ஒரு பெண் சர்வசாதாரனமக அவரது தந்தைக்கு முன்னாடி தனது காதலனுடன் செல்ல முடியும் க்ன்வனும் மனைவியும் பொது இடமொன்றிக்கு செல்லுகின்றனர் மனைவிக்கு கண்பார்வை இல்லை எனக் கொண்டால் அவ்விடத்தில் இருக்கும் தனது மனைவியை எவ்வாறு இனம் கான்பது இதை விடவும் பல்வெறு பிரச்சினைகளையுடைய சட்டம் நிச்சயமாக இறைவனல் உருவானதாக இருக்க முடியாது என்பது எனது வாதம்
ReplyDelete