இலங்கையில் 60 பேரின் மரண தண்டனை ரத்து
இலங்கையின் 69ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 60 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசன அனுமதி வழங்கியுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் ஜனாதிபதி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் நிமல் ஈ திஸாநாயக்க தலைமையிலான குழு இந்த 60 கைதிகளின் மரண தண்டனையை தளர்த்துமாறு நீதியமைச்சரிடம் பரிந்துரை செய்திருந்தது.
இதனடிப்படையில் இலங்கையின் 69ஆவது சுதந்தர தினமான 4 ஆம் திகதி அன்று இந்த கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட உள்ளது.
Post a Comment