Header Ads



டுபாயில் 6 இலங்கையர்களுக்கு சிறை

இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக துபாய் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஆறு இலங்கையர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதையடுத்தே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை காலம் நிறைவடைந்தப் பின்னர் குறித்த ஆறு பேரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த சாரதி மற்றும் தொழிலாளர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக துபாய் ஊடாக Khaleej Times செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.